செத்தால் செத்துப்போ.. சித்திக்கு பளார் பளார்..! ரேவதி ஆக்ஷனில் அதிரும் கார்த்திகை தீபம்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ரசிகர்களின் பேவரைட் சீரியல் கார்த்திகை தீபம். தினந்தோறும் பரபரப்பான திருப்பங்களுடன் ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறது.

செத்தால் செத்துப்போ:

நேற்றைய எபிசோடில் ரேவதி வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்த நிலையில், வீட்டை விட்டு செல்லும் ரேவதியை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று முடிவெடுக்கும் சாமுண்டீஸ்வரி, கையில் துப்பாக்கியை எடுத்து, "நீ வீட்டை விட்டு போனால் நான் என்னையே சுட்டுக்குவேன்!" என்று தற்கொலை மிரட்டல் விடுக்கிறார்.
ஆனால் அதற்கும் அசராத ரேவதி, "என் வாழ்க்கையை நான் பார்த்துக்குறேன்... சுட்டுக்கணும்னா சுட்டுக்கோங்க!" என்று பதிலடி கொடுத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறாள்.

சந்திரகலாவிற்கு பளார்:

இதற்கிடையில், ரேவதியை நிறுத்த முயலும் சந்திரகலா, அவளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ரேவதி, சந்திரகலாவை பளார் என்று அறைந்துவிடுகிறாள். இந்த சம்பவம் வீட்டில் இருப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. ரேவதி வெளியேறிய சோகத்தில் குடும்பமே தவிக்கிறது.

மறுபக்கம், முத்துவை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்துகின்றனர். அதேநேரத்தில், சந்திரகலா தனது வேலையை கச்சிதமாக செய்கிறாள். "நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்... ஆனா ரேவதி யாருடைய பேச்சையும் கேட்கல. பெத்த அம்மாவையே வேண்டாம்னு விட்டுட்டுப் போயிட்டா!" என்று சாமுண்டீஸ்வரியின் மனதில் மேலும் விஷத்தை விதைக்கிறாள்.

பாட்டி வீட்டில் கார்த்திக் - ரேவதி:

இதைக் கேட்டு ஏற்கனவே கோபத்தில் இருக்கும் சாமுண்டீஸ்வரி, கார்த்திக் மீது மேலும் ஆத்திரமடைகிறார். இந்நிலையில், கோவிலுக்கு வரும் ரேவதிக்காக கார்த்திக் காத்திருக்கிறான். "எதுக்காக இப்படியொரு முடிவு எடுத்த?" என்று கார்த்திக் கேட்க, "அம்மா பண்றது எதுவுமே சரியா தெரியல" என்று தனது மனவேதனையை வெளிப்படுத்துகிறாள் ரேவதி.

அதன்பிறகு, "இனிமே என்ன பண்ணலாம்?" என்று கார்த்திக் கேட்க, புதிதாக கட்டப்பட்டு வரும் கே.ஆர் இல்லத்திற்கு சென்று தங்கலாம் என ரேவதி கூறுகிறாள். ஆனால் கார்த்திக்கோ அதில் தயக்கம் இருக்கிறது. அதனால், "அப்படின்னா பாட்டி வீட்டுக்கே போயிடலாம்" என்று ரேவதி புதிய முடிவெடுக்கிறாள்.

ரேவதியின் இந்த முடிவு அவர்களின் வாழ்க்கையை எந்த திசைக்கு கொண்டு செல்லப் போகிறது? சாமுண்டீஸ்வரி கோபத்தில் அடுத்து என்ன செய்யப் போகிறார்? கார்த்திக் - ரேவதி ஜோடிக்கு புதிய பிரச்சனைகள் காத்திருக்கிறதா?

இப்படி பல பரபரப்பான திருப்பங்களுடன் நகரும் கார்த்திகை தீபம் சீரியலை தவறாமல் ஜீ தமிழில் கண்டுகளியுங்கள்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபலமான சீரியலான 'கார்த்திகை தீபம்', திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. விறுவிறுப்பான திருப்பங்களுடன் நகரும் இந்தத் தொடர், சமீபத்திய எபிசோட்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டை விட்டு வெளியேற ரேவதி முடிவெடுத்த நிலையில், அவரைத் தடுக்க சாமுண்டீஸ்வரி கையில் துப்பாக்கியை எடுத்தார். அந்தச் சமயத்தில் ரேவதி, தனது சித்தியை அதிரடியாகத் தாக்கி பதிலடி கொடுத்துள்ளார்.