குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவு... அதனால் வேலை இல்லை; வீதியில் இறங்கி போராடும் கேரள ஆசிரியர்கள்
எழுதியவர் : சஜு பிலிப் கேரளாவில் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணிக்கான தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த ஆயிரக்கணக்கானோர், தங்களுக்கு பணி நியமனம் வழங்கக் கோரி மாநிலச் செயலகத்தின் முன் 41 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க லிங்க கிளிக் செய்க கடந்த 2025 ஜூன் மாதம் முதல் மூன்று ஆண்டு காலத்திற்கு, அரசு தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்காகக் பொதுச் சேவை ஆணையம் (PSC) 6,114 பேர் கொண்ட தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. ஆனால், இதுவரை 239 பேருக்கு மட்டுமே பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலின் கால அவகாசம் 2028 மே மாதத்துடன் முடிவடைவதால், பட்டியலில் இடம் பிடித்தவர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பணி நியமனம் தாமதமாக என்ன காரணம்? தரவரிசைப் பட்டியலில் பெயர் வந்தும் ஆசிரியர்களுக்கு வேலை கிடைக்காததற்கு மாநிலத்தில் குழந்தைப் பிறப்பு விகிதம் பெருமளவு சரிந்து வருவதும், அதனால் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருவதுமே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. மாணவர் எண்ணிக்கை சரிவு 2021-22 முதல் 2025-26 வரையிலான 4 ஆண்டுகளில், கேரள அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 38.68 லட்சத்தில் இருந்து 35.35 லட்சமாகக் குறைந்துள்ளது. அதாவது 3.33 லட்சம் மாணவர்கள் குறைந்துள்ளனர். ஒன்றாம் வகுப்பு சேர்க்கை குறைவு இந்த கல்வியாண்டில் (2026) அரசு பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பில் 2,06,706 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இது கடந்த ஆண்டை (2,34,476) விடக் குறைவாகும். இதற்கு பிறப்பு விகிதம் மற்றொரு காரணமாகும். 1992-ல் 17.67-ஆக இருந்த பிறப்பு விகிதம், 2016-ல் 14.48-ஆகக் குறைந்து, 2021-இல் மேலும் சரிவைச் சந்தித்துள்ளது. தனியார் பள்ளிகள் மீது மோகம் பிறப்பு விகிதச் சரிவு தவிர, பெற்றோர் பலரும் தங்களது குழந்தைகளை தனியார் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சேர்க்க விரும்புவதும் மற்றொரு காரணமாகும். பள்ளிகளின் விதிமுறைகளும் ஆசிரியர் பணியிடங்களும் கேரள கல்வித்துறை விதிகளின்படி தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர் - மாணவர் விகிதம் 1:30 ஆக இருக்க வேண்டும். ஒரு ஆசிரியர் ஓய்வுபெறும்போது, அந்த பள்ளியில் போதுமான மாணவர்கள் இருந்தால் மட்டுமே அந்த பணியிடத்தை நிரப்ப முடியும். 2022-ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்குப் பணி பாதுகாப்பு உள்ளது. ஆனால் 2022-க்குப் பின் சேர்ந்தவர்கள், மாணவர் எண்ணிக்கை குறைந்தால் வேலையை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் வேதனை வளர்மதி (40 வயது): "நான் டி.டி.சி (TTC) முடித்து 16 ஆண்டுகள் ஆகிறது. தினக்கூலி அடிப்படையில் வேலை பார்த்தேன். இரு குழந்தைகளுக்கு தாயான எனக்கு, கேரளாவில் அரசுப் பணி பெற 40 வயதுதான் உச்சவரம்பு என்பதால் இதுவே கடைசி வாய்ப்பு” என்றார். பல்கிஸ் (27 வயது): "2017-இல் டி.டி.சி முடித்தேன். உதவிபெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணி பெற ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை கேட்கிறார்கள். ஏழை குடும்ப பின்னணி கொண்ட எங்களால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது” என்றார். மன்சூர் (36 வயது): "யு.ஏ.இ-யில் (UAE) 14 ஆண்டுகள் விற்பனையாளராக வேலை பார்த்துவிட்டுத் தாயகம் திரும்பித் தேர்ச்சி பெற்றேன். ஆனால் இன்னும் வேலை கிடைக்கவில்லை” என்றார். போராட்டக்காரர்களின் கோரிக்கைகளும் அரசின் பதிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்பினர் அரசுக்குச் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர் - மாணவர் விகிதத்தை 1:30 என்பதில் இருந்து 1:25 ஆகக் குறைக்க வேண்டும். 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ள பள்ளிகளில் கற்பித்தல் பணி இல்லாத தலைமை ஆசிரியர் பணியிடத்தை உருவாக்க வேண்டும். உதவிபெறும் பள்ளிகளில் உருவாகும் ஒவ்வொரு 2 காலி இடங்களில் ஒன்றை பி.எஸ்.சி (PSC) பட்டியல் மூலம் நிரப்ப வேண்டும். அரசின் நடவடிக்கை போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய கல்வி அமைச்சர் என். சம்சுதீன், ஆசிரியர் - மாணவர் விகிதத்தை மாற்றுவது குறித்து ஆய்வு செய்ய 45 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார். மேலும், நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். இருப்பினும், ஆசிரியர்- மாணவர் விகிதத்தைக் குறைப்பது அரசுக்குக் கடுமையான நிதிப் சுமையை ஏற்படுத்தும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மாநிலத்தின் மொத்தக் கல்விச் செலவினத்தில் பெருமளவு தொகை சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கே செலவிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர் பணி வாய்ப்பு கோரி, தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த ஆயிரக்கணக்கானோர் மாநிலச் செயலகத்திற்கு முன்னால் கடந்த 41 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2025 ஜூன் மாதம், அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்காகப் பொதுச் சேவை ஆணையம் (PSC) 6,114 பேர் கொண்ட தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. மூன்று ஆண்டுகள் செல்லத்தக்க இந்தப் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு, குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவு போன்ற காரணங்களால் பணி நியமனம் வழங்கப்படாத சூழல் ஏற்பட்டுள்ளது.