டெங்கு முன்னெச்சரிக்கை: மதுரை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு தயார்!

மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் இருக்கின்றனர். இதுதவிர மருத்துவ உபகரணங்களும், மருத்துகளும் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு - மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் டெங்கு சிறப்பு வார்டு தயார்.

தமிழகத்தின் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் சில மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பதிவாகியுள்ளது. இதன் எதிரொலியாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் வரும் நோயாளிகளுக்கு துரிதமாக சிகிச்சை அளிக்கும் வகையில் டெங்கு சிகிச்சை சிறப்பு வார்டுகளை தயார் நிலையில் வைக்கும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும், 3 வருடங்களுக்கு ஒரு முறை டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் அச்சுறுத்தல் இருப்பதால் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

40 படுக்கைகளிலும் கொசு வலைகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், அரசு மருத்துவமனையில் டெங்கு சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள 40 படுக்கைகளிலும் கொசு வலைகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், அதற்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் இருக்கின்றனர். இதுதவிர மருத்துவ உபகரணங்களும், மருத்துகளும் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதைத் தொடர்ந்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிறப்பு வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த வார்டில் சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மேலும், தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் அதிக அளவில் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன.