PulseNews
தமிழகம்

கொத்தடிமை, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி! - விழுப்புரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம். நடைபெற்றது. மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்,

கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு, கொத்தடிமைத் தொழிலாளர்களாக பணிபுரியும் வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படும் இடங்களை தொடர்ந்து கண்காணித்து, ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், கொத்தடிமைத் தொழிலாளர் முறை தொடர்பான புகார்கள் பெறப்பட்டால் உடனடியாக விசாரணை மேற்கொண்டு, சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் வகையில், மாவட்டத்திலுள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், உணவகங்கள், கட்டுமானப் பணியிடங்கள் மற்றும் பிற தொழில் நிறுவனங்களில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளவும், குழந்தைகள் தொழிலில் ஈடுபடுத்தப்படுவது கண்டறியப்பட்டால் சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், மீட்கப்படும் கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு அரசின் மறுவாழ்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் முறையாக கிடைப்பதை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதோடு, மீட்கப்படும் குழந்தைகளுக்கு கல்வி, பாதுகாப்பு, மருத்துவம் மற்றும் மறுவாழ்வு உள்ளிட்ட தேவையான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்து, அவர்கள் தொடர்ந்து கல்வி கற்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறைகள் அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் தொழிலாளர்களின் பதிவு, புதுப்பித்தல் போன்றவைகள் விவரம் குறித்தும் மற்றும் பணிகளை விரைவுபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டதோடு, பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் உரிய காலத்தில் கிடைப்பதை உறுதி செய்யவும் துறை சாரந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், தொழிலாளர் நலச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து கண்காணிக்குமாறு மாவட்டத்தில் பணிபுரியும் மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயர் தொழிலாளர்களை (Inter-State Migrant Workers) முறையாகக் கண்டறிந்து பதிவு செய்வதோடு, அவர்களின் பணிச்சூழல், தங்குமிடம் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, அவர்களுக்கு தொழிலாளர் நலன்கள் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கொத்தடிமை, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி! - விழுப்புரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு
PulseNews சுருக்கம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

மாவட்டத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை மற்றும் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu