அடுத்த அப்டேட் - ‘தர்மன்’ படக்குழு வெளியிட்ட வீடியோ
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘தர்மன்’. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் சார்பில் கமலும் டர்மெரிக் மீடியா சார்பில் மகேந்திரனும் தயாரிக்கின்றனர். சிம்ரன், ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்ட பலர் இதில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்க அன்பறிவ் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றுகின்றனர். இப்படத்தின் அறிவிப்பு கடந்த ஜூன் 24ஆம் தேதி வெளியானது. அப்போது வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட்லுக் மற்றும் செகண்ட் லுக் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இரண்டிலுமே ரஜினி டாக்டர் கெட்டப்பில் தோன்றியிருந்தார். ஒரு ஸ்டைலான டாக்டரின் வாழ்க்கையின் பின்னணியில் குடும்ப ரசிகர்களும் பார்க்கும்படியான த்ரில்லர் ஜானரில் படம் உருவாகிறது. மேலும் படையப்பா படமும் வேட்டையாடு விளையாடு படமும் கலந்த ஒரு படமாக இப்படம் உருவாகும் என இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பட அறிவிப்பு வெளியான அடுத்த நாளிலிருந்து(ஜூன் 25) சென்னையில் நடந்து வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் முடிந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதனைப் படக்குழு ஒரு சின்ன வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. வீடியோவில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் அவரின் முகம் தெளிவாகத் தெரியாமல் மற்றும் இன்னும் சில படப்பிடிப்பு தள காட்சிகள் இடம் பெற்றுள்ளது. THE DEADLY DOCTOR #Dharman Schedule 2 Begins, and this one's LEGENDARY #KettaPaiyanSir #SuperstarRajinikanth #KamalHaasan @rajinikanth @ikamalhaasan #Mahendran @Dir_Ashwath @anirudhofficial @anbariv @iYogiBabu @SimranbaggaOffc #RaashiKhanna @nikethbommi #KarthikRajkumar ... pic.twitter.com/D961SklHiR — Raaj Kamal Films International (@RKFI) August 13, 2026

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ திரைப்படத்தின் அடுத்த கட்ட அறிவிப்பு குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ராஜ்கமல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
சிம்ரன், ராஷி கண்ணா மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு அன்பறிவ் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றுகின்றனர். கடந்த ஜூன் 24-ஆம் தேதி வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களில் ரஜினிகாந்த் டாக்டர் வேடத்தில் தோன்றி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.