PulseNews
தமிழகம்

டிரம்ப் என்னங்க உங்களுக்கு விசா தரது... இந்த அமெரிக்க சிட்டில நீங்க குடியேறுனா போதும்; ரூ.12 லட்சம் ஃப்ரீயா தருவாங்க

அமெரிக்காவில் புதிய தலைமுறையினருக்கு சொந்த வீடு என்பது எட்டாக்கனியாக மாறியுள்ள சூழலில், புதிய குடியிருப்பாளர்களைத் தங்கள் நகரங்களுக்கு ஈர்ப்பதற்காக அமெரிக்காவின் சில பகுதிகள் ரொக்கப் பணம், இலவச நிலம் உள்ளிட்ட கவர்ச்சிகரமான நிதியுதவிகளை அறிவித்து வருகின்றன. இந்தியர்கள் திருடுகிறார்களா? வெளிநாட்டினரை கேள்வி கேட்டு ஓடவிட்ட லண்டன் பெண் தொலைதூரப் பணியாளர்கள் மற்றும் குடும்பங்களைக் இலக்காகக் கொண்டு இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தங்கள் பகுதிகளின் மக்கள் தொகையை உயர்த்தவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும், திறமையான பணியாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யவும் இந்த அரிய திட்டத்தை அப்பகுதிகள் கையில் எடுத்துள்ளன. எந்தெந்த நகரங்களில் என்னென்ன சலுகைகள்? டோபேகா (Topeka) டோபேகா நகரம் புதிதாக வீடு வாங்குபவர்களுக்கு 15,000 அமெரிக்க டாலர்கள், இந்திய மதிப்பில் சுமார் ரூ.12.5 லட்சம் வரை நிதியுதவி வழங்கி வரவேற்கிறது. 1.25 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்நகரத்தில் மாதச் சராசரி வீாட்டு வாடகை வெறும் 835 டாலர்கள் மட்டுமே ஆகும். நோபிள்ஸ்வில் (Noblesville) இந்தியானாபோலிஸ் அருகில் அமைந்துள்ள நோபிள்ஸ்வில் நகரம், புதிதாகக் குடியேறுபவர்களுக்கு 15,000 அமெரிக்க டாலர்கள் ரொக்கம், வரி விலக்குகள் மற்றும் இலவச நிலம் ஆகியவற்றையும் வழங்குகிறது. தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு இது மிகவும் உகந்த இடமாகும். ரோசெஸ்டர் (Rochester) கலை மற்றும் பூங்காக்களுக்குப் பெயர் பெற்ற ரோசெஸ்டர் நகரம், இங்கு வந்து குடியேறுபவர்களுக்கு 15,000 டாலர்கள் வரை நிதியுதவி வழங்கத் தயாராக உள்ளது. 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்நகரம், வசதியான மற்றும் சிக்கனமான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்றது. மட்டூன் (Mattoon) ஆன்லைன் மற்றும் வீடிலிருந்தே பணிபுரியும் நபர்களை (Remote Workers) ஈர்க்கும் வகையில், மட்டூன் நகரம் 5,000 டாலர்கள் ரொக்கப் பணம் மற்றும் உள்ளூர் வவுச்சர்கள் உட்பட மொத்தம் 11,703 டாலர்கள், இந்திய மதிப்பில் சுமார் ரூ.9.8 லட்சம் மதிப்பிலான சலுகைகளை வழங்குகிறது. அமைதியான வாழ்க்கையை விரும்புபவர்களுக்கு இந்நகரம் ஏற்றதாகும். குடியேறுவதற்கு முன் கவனிக்க வேண்டியவை அலாஸ்காவின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள் முதல் மத்திய அமெரிக்காவின் பரபரப்பான நகரங்கள் வரை பல இடங்கள் பணம் கொடுத்து மக்களை அழைத்து வருகின்றன. இருப்பினும், இந்தச் சலுகைகளைப் பெற குறிப்பிட்ட காலம் அங்கு வசிக்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகள் இருக்கும் என்பதால், அவற்றை முழுமையாகப் புரிந்துகொண்டு முடிவெடுப்பது நல்லது.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
டிரம்ப் என்னங்க உங்களுக்கு விசா தரது... இந்த அமெரிக்க சிட்டில நீங்க குடியேறுனா போதும்; ரூ.12 லட்சம் ஃப்ரீயா தருவாங்க
PulseNews சுருக்கம்

அமெரிக்காவில் சொந்த வீடு வாங்குவது இளைஞர்களுக்கு கடினமாக உள்ள சூழலில், மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கில் பல நகரங்கள் கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்துள்ளன. புதிய குடியிருப்பாளர்களை ஈர்க்கும் வகையில் அங்குள்ள சில பகுதிகள் இலவச நிலம் மற்றும் சுமார் ரூ. 12 லட்சம் வரையிலான ரொக்கப் பரிசுகளை வழங்க முன்வந்துள்ளன.

இந்த நிதியுதவித் திட்டங்கள் குறிப்பாகத் தொலைதூரப் பணியாளர்கள் மற்றும் குடும்பங்களை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்படுகின்றன. அந்தந்தப் பகுதிகளின் மக்கள் தொகையை உயர்த்தி, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த இந்த முயற்சியை அமெரிக்க நகரங்கள் மேற்கொண்டு வருகின்றன.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu