நேபாளத்தில் எதிர்பாராத நேரத்தில் ஆர்ப்பரித்த வெள்ளம்..!
ஆங்கில திரைப்படங்களில் வருவது போல், நேபாளத்தில் திடீரென ஆக்ரோசத்துடன் சீறி வந்த வெள்ளம் பாலங்களையும் வீடுகளையும் அடித்துச் சென்ற காட்சி வெளியாகியுள்ளது. திபெத் எல்லைக்கு அருகில் உள்ள ரசுவா மாவட்டத்தின் திமுரே மற்றும் சியாப்ருபெசி பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பனி சூழ்ந்த ஏரி உருகி ஒரேநேரத்தில் தண்ணீர் திரண்டு, போத்கோஷி ஆற்றில் வெள்ளம்ஆர்ப்பரித்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். வெள்ளப்பெருக்கால் 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நேபாளத்தில் உள்ள திபெத் எல்லைக்கு அருகிலுள்ள ரசுவா மாவட்டத்தின் திமுரே மற்றும் சியாப்ருபெசி பகுதிகளில், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பெருவெள்ளம் பாலங்களையும் வீடுகளையும் அடித்துச் சென்றுள்ளது. ஆங்கிலத் திரைப்படங்களில் வருவது போன்ற அந்த திகிலூட்டும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
பனி சூழ்ந்த ஏரி ஒன்று திடீரென உருகியதே இந்த வெள்ளத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இந்த இயற்கைச் சீற்றத்தினால் சுமார் 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.