“அணைகளில் நீர் இருந்தும் தர மறுக்கும் கர்நாடகா!”.. உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அதிரடி பதில் மனு!!
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு எதிராகக் கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவை நிராகரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அணைகளில் நீர் இருந்தும் தர மறுப்பதாகக் கர்நாடகா மீது குற்றம்சாட்டியுள்ள தமிழக அரசு, காவிரி ஆணையத்தின் உத்தரவுப்படி உடனடியாகத் தண்ணீர் திறந்துவிட உத்தரவிடுமாறு வலியுறுத்தியுள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மனுவை நிராகரிக்கக் கோரி, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. தங்கள் மாநில அணைகளில் போதுமான நீர் இருப்பு இருந்தும், கர்நாடகம் தண்ணீரைத் திறந்துவிட மறுப்பதாக தமிழக அரசு தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி, கர்நாடக அரசு உடனடியாகத் தண்ணீர் திறந்துவிடுவதை உறுதி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்திடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.