பள்ளிகளுக்கு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை கல்லூரிகளுக்கும் அமல்படுத்த முடியுமா?
பள்ளிகளில் மாணவர்கள் சேரும்போது அவரது பெற்றோர் சாதி விவரங்களை தெரிவிக்க விரும்பாவிடில் ஆவணங்கள் தேவையில்லை என்ற அரசாணையை கல்லூரிகளுக்கும் அமல்படுத்த முடியுமா என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும்போது சாதிய விவரங்களை கட்டாயமாக பெறக் கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது பெற்றோர்கள் சாதி விவரங்களை அளிக்க விரும்பவில்லை எனில், அது தொடர்பான ஆவணங்களைக் கேட்கத் தேவையில்லை என்ற அரசாணையை கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்த முடியுமா என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
மாணவர் சேர்க்கையின்போது சாதி விவரங்களைக் கட்டாயப்படுத்துவதைத் தவிர்க்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.