வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!

80 ஆவது சுதந்திரதினத்தில் 49ஆவது பிறந்தநாளை கொண்டாடிய வைகை எக்ஸ்பிரஸ் - மதுரை ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள், ஆர்வலர்கள் கொண்டாட்டம்.

மற்ற ரயிலின் பயணக் கட்டணத்தை விட மிக மிகக் குறைவான கட்டணத்தில் இயக்கப்படுகிறது.

1977 ஆம் ஆண்டு இந்திய நாட்டின் சுதந்திர தின நாளான ஆகஸ்ட் 15 ஆம் தேதி மதுரையிலிருந்து சென்னைக்கு பகல் நேர அதிவிரைவு ரயிலான வைகை எக்ஸ்பிரஸ் மீட்டர் கேஜ் பாதையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது மணிக்கு 105 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டதால் அன்றைய காலகட்டத்தில் இந்தியாவிலயே அதிவேக மீட்டர் கேஜ் ரயில்களில் ஒன்றாக திகழ்ந்தது. தற்போது நவீன பெட்டிகளுடன் மின்சார ரயிலாக வேகமான பயணத்தை வழங்கிவருகிறது. இந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பகல் நேரத்தில் சென்னைக்குச் செல்கின்ற தென் மாவட்ட வணிகர்களும், பொதுமக்களும் அதிகளவிற்கு பயணித்துவருகின்றனர். மற்ற ரயிலின் பயணக் கட்டணத்தை விட மிக மிகக் குறைவான கட்டணத்தில் இயக்கப்படுகிறது.

5 நிமிடங்கள் குறைக்கப்பட்டு சதாப்தி ரயில்களுக்கு இணையான வேகத்தில் இயக்கப்படுகிறது.

மதுரையிலிருந்து காலை 6.40 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.20 மணிக்கு 7.20 மணி நேரத்தில் சென்னை சென்றடையும், அதேபோன்று சென்னையிலிருந்து (12635) பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு 7.25 மணி நேரத்தில் மதுரை சென்றடையும். இரு மார்க்கமும் பகல் நேர ரயில் என்பதால், தென்மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொடங்கி அனைத்து தரப்பு மக்களுக்கும் வைகை எக்ஸ்பிரஸ் பெரிதும் உபயோகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு 7.50 மணி நேரமாக இருந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் படிப்படியாகக் கடந்த பத்தாண்டுகளில் 35 நிமிட நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 2022-ஆம் ஆண்டு மேலும் பயண நேரத்தில் 10 நிமிடங்கள் குறைக்கப்பட்டன. இந்நிலையில் மதுரையிலிருந்து புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரத்தில் மேலும் 5 நிமிடங்கள் குறைக்கப்பட்டு சதாப்தி ரயில்களுக்கு இணையான வேகத்தில் இயக்கப்படுகிறது.

எக்ஸ்பிரஸ் ரயில் தென்மாவட்ட மக்களின் பயணத் தோழனாக சேவை

வைகை எக்ஸ்பிரஸ் 49 ஆவது பிறந்தநாள் விழா மதுரை ரயில் நிலைய சந்திப்பின் நடைமேடையில் இன்று அதிகாலை 6 மணியளவில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் முன்பாக ரயில் பயண ஆர்வலர்கள் ஒன்றிணைந்து கேக் வெட்டியும் ரயில் இன்ஜினிக்கு மாலை அணிவித்தும், ரயில் பெட்டிகளை அலங்கரித்தும், தீபம் ஏந்தி வழிபாடு நடத்தி உற்சாகமாக கொண்டாடினர். அதன் பிறகு ரயில் ஆர்வலர்கள் மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் இயக்கக்கூடிய முன்னாள் மற்றும் இந்நாள் லோகோ பைலட் உள்ளிட்டோருக்கு சந்தன மாலை மற்றும் சால்வை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது விளாச்சேரி பகுதியை சேர்ந்த நவியா அன்பு மூன்றாம் வகுப்பு மாணவி வைகை ரயிலின் குறித்து கவிதைகளை எழுதி வந்த பதாகைகள் லோகோ பைலட்டிடம் வழங்கினர். சுதந்திர தினத்தன்று தொடங்கி இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்து 49 ஆண்டை தொடங்கிய வைகை எக்ஸ்பிரஸ் ரயில் தென்மாவட்ட மக்களின் பயணத் தோழனாக சேவையை தொடர்கிறது.

80-வது சுதந்திர தினத்தில் வைகை எக்ஸ்பிரஸ் தனது 49-வது பிறந்தநாளைக் கொண்டாடியது. இதையொட்டி, மதுரை ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் மற்றும் ஆர்வலர்கள் இணைந்து விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடினர்.
1977-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று, மதுரையிலிருந்து சென்னைக்கு மீட்டர் கேஜ் பாதையில் இந்த பகல் நேர அதிவிரைவு ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. அக்காலகட்டத்தில் மணிக்கு 105 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்ட இந்த ரயில், மற்ற ரயில்களைக் காட்டிலும் மிகக் குறைந்த கட்டணத்தில் பயணிகளைச் சென்றடையச் செய்கிறது.