PulseNews
தமிழகம்

தந்தைக்கு இறுதி சடங்கு.. வீடியோ காலில் வந்த மகள்.. திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்..! வைரலாகும் வீடியோ பின்னணி

கஷ்டப்பட்டு மகள்களை படிக்க வைத்த தந்தை..! மும்பையைச் சேர்ந்த சிவசரண் குப்தா - அனிதா தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர். சிவசரண் குப்தா ஜவுளி வியாபாரம் செய்து தனது மூன்று மகள்களையும் நன்கு படிக்க வைத்துள்ளார். மூன்று மகள்களில் இரண்டு மகள்கள் தற்போது ஆசிரியராக வேலை பார்த்து வருகின்றனர். மூத்த மகள் அனிதா, நேபாளத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இரண்டாவது மகள் நிஷா உத்தரப் பிரதேசத்தில் உள்ளார். இளைய மகளான பிரியா மும்பையில் வசித்து வருகிறார். மூன்று பேரும் திருமணம் செய்து கொண்டு அவர்களது குடும்பத்தோடு வசித்து வருகின்றனர். கண்டுகொள்ளாத மகள்கள்..! சிவசரண் தனது மனைவி மீனா உடன் ஹரியானாவில் சோனிபேட்டையில் வசித்து வந்தார். சமீபத்தில் மனைவி மீனா இறந்ததால், சிவசரண் மட்டும் தனியாக வீட்டில் இருந்தார். அவரை அவரது மகள்கள் கண்டுக்கொள்ளவில்லை என்பதால் அவர் முதியோர் இல்லத்தில் சேர்ந்தார். போன் வைத்திருந்த சிவசரண் அடிக்கடி தனது மகள்களோடு வீடியோ காலில் பேசி வந்துள்ளார். பின்னர், சிவசரணுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்ட பின்னர், அவரது மகள்கள் தந்தையிடம் பேசுவதை குறைத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. முதியோர் இல்லத்தில் இருந்த நிர்வாகிகள், சிவசரணின் மகள்களுக்கு போன் செய்து, தந்தையின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது, ஒருமுறை வந்து பார்த்துவிட்டு செல்லுங்கள் என கூறியுள்ளனர். ஆனால் அப்போதும் மகள்கள் யாரும் அவரை பார்க்க வரவில்லை என கூறப்படுகிறது. தந்தையின் இறுதி சடங்கு - வீடியோ காலில் வந்த மகள் கடந்த செவ்வாய்கிழமையன்று சிவசரண் உடல்நலக் குறைவு காரணமாக முதியோர் இல்லத்திலேயே காலமானார். இது குறித்து மகள்களுக்கு தகவல் தெரிவித்தும், அப்போதும் மகள்கள் யாரும் நேரில் வந்து பார்க்கவில்லை. மூத்த மகள் அனிதா, முதியோர் இல்லத்திற்கு 5,100 ரூபாய் அனுப்பி வைத்து இறுதி சடங்கை நடத்துமாறு தெரிவித்துள்ளார். பின்னர், உடல் தகனம் செய்யும்போது, மூத்த மகள் அனிதா வீடியோ காலில் பார்த்ததோடு, இறுதி சடங்கு வீடியோக்களை தனக்கு அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார். திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்..! இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வரும் நிலையில், அந்த தந்தை கஷ்டப்பட்டு மூன்று மகள்களையும் நல்ல நிலைக்கு உயர்த்தியுள்ளார். ஆனால் அந்த மூன்று மகள்களும் அப்பாவின் இறுதி சடங்கிற்கு கூட நேரில் வராமல், வீடியோ காலில் பார்க்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா? எப்படி இப்படியெல்லாம் செய்ய முடிகிறது? என நெட்டிசன்கள் அந்த மகள்களை திட்டித் தீர்த்து வருகின்றனர். டால்பின் குட்டி ஒன்று இறந்து மிதப்பது போலவும், அதனை பார்த்த சக டால்பின்கள் அந்த குட்டி டால்பினின் உடலை தூக்கி செல்வது போலவும் வீடியோவை பதிவிட்டு, டால்பின்கள் கூட பாசத்தோடு தான் உள்ளது, ஆனால் மனிதர்கள் மனசாட்சியே இல்லாமல் வீடியோ காலில் இறுதி சடங்கு நடத்துகிறார்கள் என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Polimer News21 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தந்தைக்கு இறுதி சடங்கு.. வீடியோ காலில் வந்த மகள்.. திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்..! வைரலாகும் வீடியோ பின்னணி
PulseNews சுருக்கம்

மும்பையைச் சேர்ந்த சிவசரண் குப்தா, ஜவுளித் தொழில் செய்து தனது மூன்று மகள்களையும் ஆசிரியர்களாக உயர்த்திப் பார்த்தார். மனைவி மீனா மறைவுக்குப் பிறகு, மகள்களின் கவனமின்மையால் முதியோர் இல்லத்தில் வசித்து வந்த சிவசரண், உடல்நலக் குறைவால் கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார். இறுதி சடங்கிற்கு வருமாறு அழைப்பு விடுத்தும், மகள்கள் யாரும் நேரில் வரவில்லை.

மூத்த மகள் அனிதா 5,100 ரூபாயை மட்டும் அனுப்பிவிட்டு, இறுதிச் சடங்கை வீடியோ காலில் பார்த்ததுடன், அது தொடர்பான வீடியோக்களை தனக்கு அனுப்புமாறு கேட்டுள்ளார். தந்தையின் இறுதி சடங்கை நேரில் வந்து செய்யாத மகள்களின் செயலைச் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மனிதர்களிடம் கூட இல்லாத பாசம் டால்பின்களிடம் இருப்பதைச் சுட்டிக்காட்டி, மகள்களின் இந்தச் செயலுக்குப் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu