ஜெசிகாவை வீழ்த்தி 2-வது முறையாக சின்சினாட்டி பட்டத்தை வென்ற கோகோ காப்
Cincinnati Open Tennis: ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி கோகோ காப் இரண்டாவது சின்சினாட்டி பட்டம் வென்ற வரலாற்றுச் சாதனை, 56 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு அமெரிக்க வீராங்கனைகள் மோதிய இறுதியில் 6-2, 6-4 என நேர்செட் வெற்றி. Cincinnati Open Tennis: Coco Gauff claims her second Cincinnati title with a straight-sets 6-2, 6-4 win over Jessica Pegula, marking the first all-American women’s final in 56 years and a historic milestone in her career.

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி கோகோ காப் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம், அவர் தனது இரண்டாவது சின்சினாட்டி பட்டத்தை சொந்தமாக்கிக் கொண்டார்.
கடந்த 56 ஆண்டுகளில் முதல்முறையாக அமெரிக்க வீராங்கனைகள் இருவர் மோதிய இறுதிப்போட்டி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் கோகோ காப் தனது விளையாட்டு வாழ்க்கையில் வரலாற்றுச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.