Property Registration : பத்திரப் பதிவு செய்யப் போறீங்களா.? ஆகஸ்ட் 27-ல் பொதுமக்களுக்கு சூப்பர் வசதி- என்ன தெரியுமா.?

சுப முகூர்த்த நாளில் பத்திர பதிவு

சொந்தமாக நிலம் வாங்க வேண்டும், வீடு வாங்க வேண்டும் என்பதே பலரின் ஆசையாக இருக்கும், ஆனால் பத்திர பதிவு அலுவலகத்தில் நல்ல நாளில் தாங்கள் நிலத்தையோ, வீட்டையோ பதிவு செய்ய திட்டமிடுவார்கள். ஆனால் அன்றைய தினம் அதிகளவு மக்கள் பத்திர பதிவு செய்ய விரும்புவதால் கூட்டம் அதிகரித்து காணப்படும். எனவே சுப முகூர்த்த நாளில் அதிகளவு டோக்கன் வழங்க வேண்டும் என்பது கோரிக்கையாக இருந்து வந்தது. அந்த வகையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தில் வரும் ஆவணி அவிட்டம் மற்றும் பௌர்ணமி தினத்தன்று கூடுதல் டோக்கன் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆவணி அவிட்டம் மற்றும் பௌர்ணமி தினம்

இது தொடர்பாக பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சுபமுகூர்த்த மற்றும் விசேஷ தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது ஆவணி மாதத்தில் வரும் ஆவணி அவிட்டம் மற்றும் பௌர்ணமி தினமான 27.08.2026 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களி மிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

கூடுதல் டோக்கன் - பத்திர பதிவு துறை அறிவிப்பு

எனவே, ஆவணி மாதத்தில் ஆவணி அவிட்டம் மற்றும் பௌர்ணமி தினமான 27.08.2026 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200 க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100 க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகள் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொந்தமாக நிலம் அல்லது வீடு வாங்குவோர் சுப முகூர்த்த நாட்களில் பத்திரப் பதிவு செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் முகூர்த்த நாட்களில் பதிவகங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கூடுதல் டோக்கன்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, வரும் ஆகஸ்ட் 27-ம் தேதி சுப முகூர்த்த நாளில் பத்திரப் பதிவு செய்ய விரும்பும் பொதுமக்களுக்காக கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சிறப்பு ஏற்பாடு மூலம் மக்கள் தங்களுக்கு விருப்பமான நல்ல நாளில் எவ்வித சிரமமும் இன்றி பத்திரப் பதிவை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.