PulseNews
தமிழகம்

கணவனுடன் 6 பேரை எரித்துக் கொன்ற மனைவிக்கு 8 ஆயுள் தண்டனை..!

மதுரை மாவட்டம் சேடபட்டி அருகே, 2015-ஆம் ஆண்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை வீட்டுக்குள் வைத்து எரித்துக் கொன்ற வழக்கில், மனைவி உள்பட 3 பேருக்குத் தலா 8 ஆயுள் தண்டனையுடன்,10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பேரையூர் குமாரபுரத்தைச் சேர்ந்த கண்ணன், பரமேஸ்வரி இருவரும் காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், இருவருக்கும் இடையே குடும்பப் பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கண்ணனின் குடும்பத்தில், 3 சிறார்கள் உட்பட 7 பேரை, பரமேஸ்வரியும் அவரது உறவினர்கள் முருகேஸ்வரி, ராஜபாண்டி ஆகியரோடு சேர்ந்து எரித்துக் கொன்றனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த மதுரை மாவட்ட 6ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி உதயவேலவன், அனைத்து தணடனைகளையும் ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

Polimer News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கணவனுடன் 6 பேரை எரித்துக் கொன்ற மனைவிக்கு 8 ஆயுள் தண்டனை..!
PulseNews சுருக்கம்

மதுரை மாவட்டம் சேடபட்டி அருகே 2015-ஆம் ஆண்டு நடந்த கொடூர கொலை வழக்கில், கணவர் உள்ளிட்ட 7 பேரை வீட்டிற்குள் வைத்து எரித்துக் கொன்ற மனைவி உட்பட 3 பேருக்கு மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குத் தலா 8 ஆயுள் தண்டனையும், கூடுதலாக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

பேரையூர் குமாரபுரத்தைச் சேர்ந்த கண்ணன், பரமேஸ்வரி தம்பதியினருக்கு இடையே இருந்த குடும்பப் பிரச்சனை காரணமாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கண்ணனின் குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறார்கள் உள்ளிட்ட 7 பேர் இந்தக் கொலையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu