PulseNews
தமிழகம்

இந்த கடற்கரைக்கு போனா உங்க கால்; பிங்க் நிறத்துல மாறிடும்... ஆனா ஒரு கண்டிசன் இருக்கு?

'பார்பி' (Barbie) திரைப்படங்களில் நாம் பார்க்கும் இளஞ்சிவப்பு (Pink) உலகம் வெறும் கற்பனை அல்ல. உலகில் உள்ள சில குறிப்பிட்ட கடற்கரைகள் இயற்கையாகவே ரோஜா நிற மணற்பரப்பைக் கொண்டு அமைந்துள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? பவளப்பாறைகள், கடல் சிப்பிகள் மற்றும் இயற்கையான தாதுக்கள் நொறுங்கி வெண்மணலுடன் கலப்பதால் இத்தகைய பிங்க் நிறம் உருவாகிறது. இந்திய பயணிகளுக்கு அடித்த ஜாக்பாட்: பாஸ்போர்ட், விசா தேவையில்ல; வெளிநாடு போகலாம் வாங்க பெர்முடா, கிரீஸ், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள இந்த அழகான பிங்க் கடற்கரைகள், எடிட் செய்யப்பட்டது போல் தோன்றினாலும் முற்றிலும் நிஜமானவை. உங்கள் அடுத்த சுற்றுலாப் பட்டியலிலில் சேர்க்க வேண்டிய உலகின் டாப் இளஞ்சிவப்பு கடற்கரைகள் குறித்து பார்க்கலாம். எலாஃபோனிசி கடற்கரை, கிரீஸ் (Elafonissi Beach, Greece) இங்குள்ள பிங்க் நிற மணற்பரப்பின் மீது முழங்கால் அளவுக்கு இருக்கும் மரகதப் பச்சை நீரில் பயணிகள் ஜாலியாக உலா வரலாம். கடல் அலைகளின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப மணலின் பிங்க் நிறத்தின் அடர்த்தி மாறும். பல நூறு அடிகள் தூரம் வரை நீர் ஆழமின்றி இருப்பதால், குடும்பத்துடன் குளித்து மகிழ இதுவே சிறந்த இடமாகும். ஃபைஃபர் கடற்கரை, கலிபோர்னியா (Pfeiffer Beach, California) கலிபோர்னியாவில் உள்ள ஃபைஃபர் கடற்கரை மணல் வழக்கமாக ஊதா நிறத்தில் இருக்கும். அருகில் உள்ள மலைகளில் இருந்து வரும் 'மாங்கனீசு கார்னட்' தாதுக்களே இதற்குக் காரணம். இருப்பினும், மாலையில் சூரியன் அஸ்தமிக்கும் போது கடற்கரை முழுவதும் இளஞ்சிவப்பு நிறத்தில் ஜொலிக்கும். இங்குள்ள இயற்கைப் பாறை வளைவான 'கீஹோல் ராக்' (Keyhole Rock) வழியே சூரிய ஒளி ஊடுருவும் காட்சி புகழ்பெற்றது. ஸ்பியாகியா ரோசா, இத்தாலி (Spiaggia Rosa, Sardinia, Italy) இத்தாலியின் புடெல்லி தீவில் உள்ள இந்த ரோஜா நிறக் கடற்கரையைப் பயணிகள் தூரத்தில் இருந்து பார்த்து ரசிக்க மட்டுமே முடியும். மணலில் இறங்க அனுமதியில்லை. 1990-களில் சுற்றுலாப் பயணிகள் இந்த பிங்க் மணலை பாட்டில்களில் அடைத்துச் சென்றதால், இங்கு மனிதர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. பவளப்பாறைகள், கிரானைட் மற்றும் சிப்பிகளின் துகள்கள் இதற்கு பிங்க் நிறத்தைத் தருகின்றன. ஹார்ஸ்ஷூ பே, பெர்முடா (Horseshoe Bay, Bermuda) பெர்முடாவில் பல பிங்க் நிறக் கடற்கரைகள் இருந்தாலும், 'ஹார்ஸ்ஷூ பே' மிகவும் புகழ்பெற்றது. சுண்ணாம்புப் பாறைகள் நிறைந்த இந்த அழகிய கடற்கரை புகைப்படக் கலைஞர்களின் சொர்க்கமாகத் திகழ்கிறது. பிங்க் பீச், இந்தோனேசியா (Pink Beach, Komodo Island, Indonesia) கொமோடோ தேசியப் பூங்காவில் உள்ள 'பந்தாய் மேரா' (Pantai Merah) அல்லது 'பிங்க் பீச்' உலகின் மிகச்சிறந்த இளஞ்சிவப்பு கடற்கரையாகக் கருதப்படுகிறது. சிவப்பு பவளப்பாறைகள் நொறுங்கி இந்த நிறத்தை உருவாக்குகின்றன. சுற்றிலும் மரகதப் பச்சை நீர் மற்றும் பசுமையான மலைகளுக்கு இடையே இந்த பிங்க் கடற்கரை காட்சி அளிக்கிறது. அனுமதி பெற்ற சுற்றுலா வழிகாட்டிகளுடன் இங்கு செல்வது சிறந்தது.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இந்த கடற்கரைக்கு போனா உங்க கால்; பிங்க் நிறத்துல மாறிடும்... ஆனா ஒரு கண்டிசன் இருக்கு?
PulseNews சுருக்கம்

பார்பி திரைப்படங்களில் காட்டப்படும் இளஞ்சிவப்பு நிற உலகம் நிஜத்திலும் சாத்தியம் என்பது பலருக்கும் ஆச்சரியமான விஷயம். உலகிலுள்ள சில கடற்கரைகளில் பவளப்பாறைகள், கடல் சிப்பிகள் மற்றும் தாதுக்கள் மணலுடன் கலந்து இயற்கையாகவே ரோஜா நிற மணற்பரப்பை உருவாக்குகின்றன.

பெர்முடா, கிரீஸ், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இத்தகைய பிங்க் நிற கடற்கரைகள் அமைந்துள்ளன. இந்த இடங்களுக்குச் செல்ல விரும்புவோர் அந்தந்த நாட்டின் பயணக் கட்டுப்பாடுகளை அறிந்து கொண்டு திட்டமிட வேண்டும்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu