பாரத், எச்பி, இண்டேனில் 5 கிலோ சிலிண்டர் பெறுவது எப்படி..? வைப்புத்தொகை முதல் ரீஃபில் வரை முழு விபரம்
5 கிலோ சிலிண்டரை பின்னர் 14.2 கிலோ சிலிண்டராக மாற்றிக்கொள்ளும் ‘refill swap’ வசதியும் HPCL வழங்குகிறது. Indane-லும் ‘Chhotu’ என்ற பெயரில் 5 கிலோ Free Trade LPG சிலிண்டர் தேர்ந்தெடுக்கப்பட்ட விநியோக மையங்களில் கிடைக்கிறது.

பாரத், எச்பி மற்றும் இண்டேன் ஆகிய நிறுவனங்களில் 5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் அதன் வைப்புத்தொகை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இதில் எச்பி நிறுவனம், 5 கிலோ சிலிண்டரை பிற்காலத்தில் 14.2 கிலோ சிலிண்டராக மாற்றிக்கொள்ளும் ‘ரிஃபில் ஸ்வாப்’ (refill swap) வசதியை வழங்குகிறது.
இதேபோல், இண்டேன் நிறுவனம் ‘சோட்டு’ (Chhotu) என்ற பெயரில் 5 கிலோ எடையுள்ள 'ஃப்ரீ டிரேட் எல்பிஜி' (Free Trade LPG) சிலிண்டர்களை விற்பனை செய்கிறது. இந்தச் சேவை தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட விநியோக மையங்களில் மட்டுமே வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது.