PulseNews
தமிழகம்

எங்களுக்கே விபூதி அடிக்க பார்க்கிறாயா?; பிரபல ஆடை நிறுவனத்தின் தில்லாலங்கடி வேலை

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள புதிய ஆடை ரகம் உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிறுவனம், சமீபத்தில் புதிய ரக ஆடை ஒன்றை வெளியிட்டது. அதன் விலை ரூ.26 ஆயிரம் என்றும் அறிவித்திருந்தது. அந்த ஆடையும், அதன் விலையும் இந்தியர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிறுவனம், நமது நாட்டின் பாரம்பரிய உடையான சேலையை, தங்களின் சொந்த ஆடை வடிவமைப்பு என்று விற்பனை செய்ய முயன்றுள்ளது. இதற்கு இணையவாசி கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அந்த நிறுவனம் அந்த ஆடையின் பெயரை மாற்றியுள்ளது. அதாவது, ’சேலையினால் ஈர்க்கப்பட்ட கவுன்’ என்று பெயர் மாற்றம் செய்துள்ளது. சேலைக்கு கவுன் எனப் பெயரிட்டதற்கும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தெற்காசிய நாடுகளின் பாரம்பரிய உடையைப் பிற பிராந்தியங்களில் புதிய ரக ஆடை என்று சந்தைப்படுத்த முயன்ற அந்த நிறுவனத்தை இணைய வாசிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இதில், பலரும் எங்களுக்கே விபூதி அடிக்க பார்க்கிறாயா? எனக் கிண்டலடித்து வருகின்றனர்.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
எங்களுக்கே விபூதி அடிக்க பார்க்கிறாயா?; பிரபல ஆடை நிறுவனத்தின் தில்லாலங்கடி வேலை
PulseNews சுருக்கம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட பிரபல ஆடை நிறுவனம் ஒன்று, புதிய ரக ஆடை ஒன்றை அறிமுகப்படுத்தி 26 ஆயிரம் ரூபாய் என விலை நிர்ணயம் செய்துள்ளது. இந்த ஆடை இந்தியர்களின் பாரம்பரிய உடையான சேலையைப் போன்றே இருப்பதால், அந்நிறுவனம் சேலையைத் தங்களது சொந்த வடிவமைப்பு எனக் கூறி விற்பனை செய்ய முயல்வதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தச் செயலால் இந்தியர்கள் கடும் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். தற்போது இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளதோடு, நெட்டிசன்கள் அந்த நிறுவனத்திற்கு எதிராகக் கடுமையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu