விபத்துக்களை தடுக்க சாலை தடுப்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்
திருப்பூர், ஆக. 21: திருப்பூர் மாநகரில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், வாகனங்களை முறைப்படுத்தவும் சாலைகளின் நடுவே சென்டர் மீடியன் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இரவு நேரங்களிலும், போதிய வெளிச்சம் இல்லாத வேளைகளிலும் எதிரே வரும் வாகனங்களின் முகப்பு வெளிச்சத்தால், இந்த தடுப்புகள் வாகன ஓட்டிகளுக்கு சரியாக தெரிவதில்லை. இதனால், கட்டுப்பாட்டை இழக்கும்...
திருப்பூர் மாநகர சாலைகளில் வாகன நெரிசலை முறைப்படுத்த நடுவில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால், இந்தத் தடுப்புகள் வாகன ஓட்டிகளுக்குத் தெரிவதில்லை.
எதிரே வரும் வாகனங்களின் வெளிச்சத்தால் ஏற்படும் பார்வைக் குறைபாட்டினால் வாகன ஓட்டிகள் தடுப்புகளை கவனிக்கத் தவறி விபத்துகளில் சிக்குகின்றனர். இதனைத் தவிர்க்க சாலை தடுப்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.