கலைஞர் அறிவாலயத்தில் கலகலத்த கரூர் தி.மு.க. செயற்குழு; மாவட்டப் பிரிப்புக்கு உற்சாக வரவேற்பு!
கரூர் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம், கரூர் மாவட்டக் கழக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் உள்ள தளபதி அரங்கத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது. மாவட்டக் கழக அவைத் தலைவர் டி.ராஜேந்திரன் தலைமை தாங்கிய இக்கூட்டத்தில், கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ சிறப்புரையாற்றி கூட்டத்தை வழிநடத்தினார். மாவட்ட அளவிலான இக்கூட்டத்தில் தி.மு.க.வின் முன்னணி தலைவர்கள் திரளாக கலந்துகொண்டனர். கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி, கழக நெசவாளர் அணித் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், சட்டத்துறை இணைச் செயலாளர் என்.மணிராஜ், நெசவாளர் அணிச் செயலாளர் பரணி கே.மணி மற்றும் கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் கரூர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.இளங்கோ, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் சூரியனூர் அ.சந்திரன், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உள்ளிட்ட பலரும், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் கழகச் செயலாளர்கள், அணி அமைப்பாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டு கூட்டத்தைச் சிறப்பித்தனர். இக்கூட்டத்தில் முதன்மையாக, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினின்தலைமையில் ஆகஸ்ட் 22 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தலைமைச் செயற்குழு தீர்மானங்களுக்கு முழுமையான ஒப்புதல் அளிக்கப்பட்டது. குறிப்பாக, கரூர் மாவட்டத்தை மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களாகப் பிரித்து அறிவிப்பு வெளியிட்ட கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இக்கூட்டம் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டது. மேலும், மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, பகுதி, நகர, ஒன்றிய, பேரூர் மற்றும் வார்டு, கிளைக் கழகங்களை வயது வரம்பின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்வது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தற்போதைய அரசியல் சூழலைக் கண்டித்து செயற்குழுவில் மொத்தம் ஏழு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாட்டின் மக்கள் நலத் திட்டங்களை முடக்கும் வகையிலும், அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியைக் கட்டுப்படுத்தத் தவறியும் வரும் த.வெ.க அரசைக் கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, கடந்த மூன்று மாத கால ஆட்சியில் மாநிலத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள், கொலைச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களைத் தடுக்கத் தவறிய த.வெ.கவினரையும், அரசையும் இக்கூட்டம் வன்மையாகக் கண்டித்தது. தொடர்ந்து மின்வெட்டு இல்லா மாநிலமாகத் திகழ்ந்த தமிழகத்தில், தற்போது நிலவும் தொடர் மின்வெட்டு, முறையற்ற மின் கணக்கீடு மற்றும் கடுமையான மின்கட்டண உயர்வால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் படும் அவதிகளுக்குத் த.வெ.க அரசே முழுப் பொறுப்பு என்று குற்றம் சாட்டப்பட்டது. கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினின் ஆட்சிக் காலத்தில் கரூர் மாவட்ட மக்களின் நலனுக்காகக் கொண்டு வரப்பட்ட ரூ.485.38 கோடி மதிப்பிலான பாதாள சாக்கடைத் திட்டம், ரூ.245.07 கோடி மதிப்பிலான புதிய குடிநீர் திட்டம், ரூ.38.50 கோடி மதிப்பிலான ஐடி பார்க் திட்டம் மற்றும் ரூ.10 கோடி மதிப்பிலான நெரூர் சாலை விரிவாக்கம் உள்ளிட்ட முத்தான திட்டங்களின் ஒப்பந்தப் புள்ளிகளைத் த.வெ.க அரசு தன்னிச்சையாக ரத்து செய்துள்ளதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டித்தது. கூர்மையான விவாதங்கள் மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்த முக்கிய ஆலோசனைகளுடன் கரூர் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

கரூர் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம், கலைஞர் அறிவாலயத்தில் உள்ள தளபதி அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் டி.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட செயலாளர் வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றி கூட்டத்தை வழிநடத்தினார்.
தி.மு.க.வின் முன்னணி தலைவர்கள் திரளாக பங்கேற்ற இந்த கூட்டத்தில், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி, நெசவாளர் அணித் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் கரூர் மாவட்டத்தை பிரிக்கும் முடிவுக்கு உற்சாக வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.