PulseNews
தமிழகம்

ஸ்டாலின் முன்னாள் உதவியாளர் ஹரி கிருஷ்ணன் மரணம்: அரசு வேலையை உதறிவிட்டு ஸ்டாலினுடன் இணைந்தவர்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் முன்னாள் உதவியாளரான ஹரிகிருஷ்ணன் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். சென்னை மாநகராட்சி மேயராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு வகித்த காலத்தில், மக்கள் தொடர்பு அலுவலராக (PRO) ஹரிகிருஷ்ணன் பணியாற்றினார். பின்னர் தனது அரசு வேலையை உதறிவிட்டு, விருப்ப ஓய்வு பெற்று ஸ்டாலினின் உதவியாளராக நீண்ட காலம் பணியாற்றி வந்தார். கடந்த சில ஆண்டுகளாக ஓய்விலிருந்த அவர், அண்மையில் ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். ஸ்டாலினின் இரங்கல் செய்தி: "என்னுடைய உதவியாளராகப் பணியாற்றிய ஹரிகிருஷ்ணன் மறைந்த செய்தியால் மிகவும் மனம் வருந்தி நிற்கிறேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் சென்னை மேயராகப் பொறுப்பு வகித்தபோது, மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றி, பின்னர் அந்தப் பொறுப்பிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, என்னுடைய உதவியாளராக நெடுங்காலம் பணியாற்றியவர் அவர். என் உழைப்புக்கு உறுதுணையாக, காலநேரம் பாராது - கண் துஞ்சாது அவர் பணியாற்றிய காட்சிகளெல்லாம் நினைவலைகளாய் என்னுள் எழுந்து, நெஞ்சத்தைக் கனக்கச் செய்கின்றன; துயரை அதிகரிக்கின்றன. கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி என்னுடைய உதவியாளராகப் பணியாற்றிய திரு. ஹரிகிருஷ்ணன் அவர்கள் மறைவெய்திய செய்தியால் மிகவும் மனம் வருந்தி நிற்கிறேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் சென்னை மேயராகப் பொறுப்பு வகித்தபோது,... pic.twitter.com/Wc3ILfIADB — DMK (@arivalayam) August 22, 2026 கடந்த சில ஆண்டுகளாகப் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்த அவர், அண்மையில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இன்று நீடுதுயில் கொண்டுவிட்டார். பழகுவதற்கு இனிய குணம் கொண்ட ஹரிகிருஷ்ணன் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய ஆறுதலை உரித்தாக்குகிறேன்." என்று தெரிவித்துள்ளார். ஹரிகிருஷ்ணனின் மறைவையடுத்து ஸ்டாலின் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்குத் தன் ஆறுதலைத் தெரிவித்தார்.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஸ்டாலின் முன்னாள் உதவியாளர் ஹரி கிருஷ்ணன் மரணம்: அரசு வேலையை உதறிவிட்டு ஸ்டாலினுடன் இணைந்தவர்
PulseNews சுருக்கம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றியவர் ஹரிகிருஷ்ணன். பின்னர் தனது அரசுப் பணியை விருப்ப ஓய்வு மூலம் துறந்துவிட்டு, ஸ்டாலினின் உதவியாளராக நீண்ட காலம் பணியாற்றி வந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக ஓய்வில் இருந்த ஹரிகிருஷ்ணன், உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu