செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட்டார் சிறிதரன்
செம்மணி மனிதப் புதைகுழியில் இடம்பெற்று வரும் அகழ்வுப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்று (14.08.2026) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். செம்மணி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்த நிலையில், அதற்கான அனுமதி நீதிமன்றத்தால் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இன்று அகழ்வுப் பணிகள் இடம்பெறும் இடத்திற்குச் சென்று நிலைமைகளை அவதானித்தார். 51ஆவது நாள் அகழ்வு பணி ச...

செம்மணி மனிதப் புதைகுழியில் நடைபெற்று வரும் அகழ்வுப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்று (14.08.2026) நேரில் சென்று பார்வையிட்டார். இந்தப் பணியினை நேரில் ஆய்வு செய்ய நீதிமன்றத்திடம் அவர் அனுமதி கோரியிருந்த நிலையில், அதற்கு நீதித்துறை ஒப்புதல் அளித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து, 51ஆவது நாளாக இடம்பெற்று வரும் குறித்த அகழ்வுப் பணி நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்ற சிறிதரன், அங்குள்ள தற்போதைய நிலவரங்களை நேரடியாக அவதானித்தார்.