PulseNews
தமிழகம்

'பெண் மருத்துவரிடம் ஓடிபி கேட்டு 10 லட்சம் அபேஸ்'-சைபர் கிரைம் போலீசார் விசாரணை

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலை குமிட்டபுரத்தைச் சேர்ந்தவர் அனில்குமார் (31) தனியார் நிறுவன லேப் பொறுப்பாளர். கடன் பெற எண்ணி முகநூலில் விளம்பரங்களின் திட்டங்களை பார்வையிட்டு விவரங்களை கேட்டு வந்தார். அப்போது அறிமுகம் இல்லாத ஒருவர்,கடன் தேவையை பூர்த்தி செய்வதாகவும், பல லட்சம் ரூபாய் கடனுதவி பெற்று தருவதாக கூறியுள்ளார். கடன் வழங்க ஒப்புதல் அளித்து விட்டதாகவும் அதற்கான ஆவணக் கட்டணம், ஊழியர்களுக்கு சன்மானம் அளிக்க பணம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதை நம்பிய அனில்குமார் கடந்த இரண்டாம் தேதி முதல் 10ஆம் தேதி வரை ஆசாமி கூறிய வங்கி கணக்குக்கு 1 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தியுள்ளார். ஆனாலும் கடன் தொகை வராததால் முகநூல் நபரை தொடர்பு கொள்ள முயன்றபோது அவரது வங்கி கணக்கில் இருந்து வெளியேறியது தெரியவந்தது. ஏமாற்றப்பட்டதை அறிந்த அனில்குமார் ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதேபோல் ஈரோடு சோலார் புதூர் பகுதியில் பெண் சித்த மருத்துவர் ஒருவர் வசித்து வருகிறார். அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு தற்போது 69 வயதாகிறது அவரது செல்போன் வாட்ஸ் அப் மூலம் சில நாட்களுக்கு முன்பு ஒரு குரல் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் இருந்து அதிகாரி பேசுவதாக கூறி அறிமுகப்படுத்திக்கொண்டார் தொடர்ந்து பேசிய அந்த நபர் பெண் சித்த மருத்துவரின் வங்கி கணக்கில் உள்ள ஏடிஎம் அட்டையை புதுப்பிக்கும் நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார். அவர் வங்கிக்கு சென்று புதுப்பிக்கிறேன் என்று கூறியதற்கு வயதான நேரத்தில் நீங்கள் வண்டிக்கு அலைய வேண்டியதில்லை செல்போனில் நான் சொல்வதை அப்படியே செய்யுங்கள் வீட்டில் இருந்தே அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவித்தார். ஏடிஎம் அட்டை புதுவிக்க வசதியாக ஒரு படிவம் அனுப்பி தருவதாகவும் அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் படியும் எதிர் முனையில் பேசியவர் கூறினார். அதை உண்மை என்று நம்பிய சித்த மருத்துவர், படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தார். சில நொடிகளில் ஓடிபி வந்தது உடனடியாக வாங்கி அதிகாரி என பேசியவர் வாட்ஸ் அப் அழைப்பில் வந்து அதைக் கேட்டார். அதற்குப் பிறகு அவர் தொடர்பை வரவில்லை ஒரு வாரத்திற்கு பின்னர் அவர் கணக்கு வைத்துள்ள வங்கியில் இருந்து நிஜமான வங்கி அதிகாரி செல்போனில் தொடர்பு கொண்டு அவரது வங்கி கணக்கில் இருந்து அதிக அளவு பணம் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அதை எதற்காக எடுத்து விட்டீர்கள் என்றும் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் எதுவும் எடுக்கவில்லை என்று கூறியதற்கு வங்கியில் இருந்து பணம் எடுக்கப்பட்டதை வங்கி அதிகாரிகள் உறுதி செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் மருத்துவர் வங்கிக்கு நேரடியாக சென்று பார்த்தார் அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ 10 லட்சத்து 91 ஆயிரத்து 300 மோசடியாக மர்ம நபர்கள் எடுத்தது தெரிய வந்தது. இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் ஈரோடு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
'பெண் மருத்துவரிடம் ஓடிபி கேட்டு 10 லட்சம் அபேஸ்'-சைபர் கிரைம் போலீசார் விசாரணை
PulseNews சுருக்கம்

ஈரோடு மாவட்டம் தாளவாடியைச் சேர்ந்த தனியார் லேப் பொறுப்பாளர் அனில்குமார், சமூக வலைதளத்தில் கடன் தொடர்பான விளம்பரத்தைப் பார்த்து அணுகியுள்ளார். அப்போது அறிமுகமில்லாத நபர் ஒருவர், அவருக்குக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ஆவணக் கட்டணம் மற்றும் ஊழியர்களுக்கான சன்மானம் எனப் பல்வேறு காரணங்களைக் கூறி பணம் பெற்று மோசடி செய்துள்ளார்.

இதனை நம்பி அனில்குமார் பணம் செலுத்திய நிலையில், தற்போது சைபர் கிரைம் போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், பெண் மருத்துவரிடம் ஓடிபி எண் கேட்டு 10 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக மற்றொரு புகாரும் பதிவாகியுள்ளது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu