ஊழல்வாதிகளை காப்பாற்ற திட்டமிடும் ரணில்: அரசாங்கத்தை திசை திருப்ப சதி...!
எதிர்காலத்தில் கைது செய்யப்படவுள்ள மற்றும் தண்டனைப் பெறவுள்ள ஊழல்மிக்க எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை காப்பாற்றுவதற்காகவே ரணில் விக்ரமசிங்க பொருளாதார பீதியை உருவாக்கி மீண்டும் அவர்களுக்கு அரசியல் தஞ்சமளிக்க முயற்சிக்கின்றார் என்று ஜன பலய அமைப்பின் செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கண்ணங்கர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அ...

எதிர்க்கட்சியில் உள்ள ஊழல் அரசியல்வாதிகளைச் சட்ட நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பதற்காகவே, ரணில் விக்ரமசிங்க நாட்டில் பொருளாதார பீதியை உருவாக்க முயற்சிப்பதாக ஜன பலய அமைப்பின் செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கண்ணங்கர குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், கைது மற்றும் தண்டனைக்குள்ளாகவிருக்கும் ஊழல்வாதிகளை மீளவும் அரசியல் அடைக்கலத்திற்குள் கொண்டுவரவே ரணில் இத்தகைய சதித் திட்டங்களைச் செயல்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கிலேயே இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.