PulseNews
தமிழகம்

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 254 ஆக உயர்வு..!

கொலம்பியாவில் திங்கள் கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 254 ஆக உயர்ந்துள்ளது. பெரீரா என்ற நகரில் மட்டும் 101 பேர் உயிரிழந்தனர். அங்கு ஆயிரக் கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டாகியுள்ளன. பலர் இடிபாடிகளில் சிக்கியுள்ளதால், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.மோப்ப நாய் உதவியுடன் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதிபர் அபெலார்டோ டி லா எஸ்பிரில்லா (Abelardo de la Espriella), நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பெரீரா (Pereira) தவிர, குவிப்டோ (Quibdo), காலி (Cali) போன்ற நகரங்களிலும் பெரும் சேதங்களும், அதிக உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆறு விமான நிலையங்களில் உள்ள கட்டுமானங்கள், 18 தேசிய நெடுஞ்சாலைகள் பெரிதும் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Polimer News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 254 ஆக உயர்வு..!
PulseNews சுருக்கம்

கொலம்பியாவில் திங்கட்கிழமை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 254 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரீரா நகரில் மட்டும் 101 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.

பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மோப்ப நாய்களின் உதவியுடன் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதிபர் அபெலார்டோ டி லா எஸ்பிரில்லா பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu