நேபாளத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உரிமையாளருக்காக காத்துக்கிடக்கும் நாய்
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் காணாமல் போன தனது உரிமையாளருக்காக அடித்துச் செல்லப்பட்ட வீடு இருந்த இடத்தைவிட்டு நகராமல் வளர்ப்பு நாய் ஒன்று காத்திருக்கும் காட்சி பார்ப்போரை கலங்கச் செய்துள்ளது. இந்த வெள்ளத்தில் திரிசூலி பஜார் பகுதியில் இருந்த நான்கு வீடுகள் அடித்துச் செல்லப்பட்டது. அந்த நான்கு வீடுகளில் இருந்தவர்களும் என்ன ஆனார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. நகர மறுத்து தனது உரிமையாளருக்காக காத்திருக்கும் காட்சி இடிபாடுகளுக்கு மத்தியில் சேற்றில் அமர்ந்தி...

நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் திரிசூலி பஜார் பகுதியில் இருந்த நான்கு வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்த விவரங்கள் இதுவரை தெரியவில்லை.
தற்போது தரைமட்டமான அந்த வீடுகளின் இடிபாடுகளுக்கு மத்தியில், சேற்றில் அமர்ந்து தனது உரிமையாளருக்காக நாய் ஒன்று நகராமல் காத்திருக்கிறது. இந்த உருக்கமான காட்சி காண்போரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.