PulseNews
தமிழகம்

வைரல் இன்ஸ்டாகிராம் வ்ளாகருக்கு நடந்த சோகம்: பஸ் கண்டக்டருடன் ஓடிய மனைவி!

கேரளாவைச் சேர்ந்த பிரபல யூடியூபரும் இன்ஸ்டாகிராம் வ்ளாகருமான அகில் NRD-யின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம் சமூக வலைதளங்களில் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக தனது வாழ்க்கை, நண்பர்கள், நகைச்சுவை சம்பவங்கள் மற்றும் அன்றாட நிகழ்வுகளை மையமாக வைத்து கன்டென்ட் உருவாக்கி வந்த அகில், தற்போது தனது மனைவி மேகா தொடர்பான விவகாரத்தால் பேசுபொருளாகியுள்ளார்.

யார் இந்த அகில் NRD

ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த அகில் NRD, முதலில் Merchant Navy பணியில் இருந்தவர். பின்னர் அந்த வேலையை விட்டு கன்டென்ட் கிரியேஷன் மீது கவனம் செலுத்தத் தொடங்கினார். யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் நகைச்சுவை வீடியோக்கள், பொழுதுபோக்கு கன்டென்ட், நண்பர்களுடன் இணைந்த வீடியோக்கள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து பதிவிட்டு வந்த அவர், கேரளாவில் குறிப்பிடத்தக்க சமூக வலைதள பிரபலமாக உருவெடுத்தார். அவரது யூடியூப் சேனலுக்கு 49 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் இருந்து வருகிறார்கள் , இன்ஸ்டாகிராமில் சுமார் 18 லட்சம் பேர் பிந்தொடர்ந்து வருகிறார்கள்

அகிலின் மனைவி மேகா

பல ஆண்டுகளாக காதலித்து வந்த அகில் மற்றும் மேகா, குடும்பத்தினரின் சம்மதத்துடன் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டனர். திருமண வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றிருந்தன. திருமணத்திற்குப் பிறகு இருவரும் இணைந்து வெளியிட்ட கன்டென்ட்களால், ரசிகர்கள் மத்தியில் இந்த ஜோடி தனி அடையாளத்தைப் பெற்றிருந்தது.

அகிலின் கன்டென்ட்களில் அவரது மனைவி மேகாவும் தொடர்ந்து இடம்பெற்று வந்தார். இருவரும் இணைந்து உருவாக்கிய குடும்பம் மற்றும் வாழ்க்கை சார்ந்த வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. மேகா சட்டத்துறையைச் சேர்ந்தவர் என்றும், LLB படித்தவர் என்றும் கூறப்படுகிறது. திருமணத்துக்குப் பிறகு அகிலின் வீடியோக்களில் தொடர்ந்து தோன்றிய அவர், பின்னர் தனக்கென இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் உருவாக்கி ஃபேஷன் மற்றும் அழகு சார்ந்த பதிவுகளை வெளியிட்டு வந்தார்.

பேருந்து நடத்துனருடன் ஓட்டம்

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அகில் மற்றும் மேகா இடையே ஏற்பட்டதாகக் கூறப்படும் குடும்பப் பிரச்சினை சமூக வலைதளங்களில் தீவிரமாக பேசப்பட்டது. மேகா வீட்டை விட்டு வெளியேறியதாக தகவல் பரவிய நிலையில், அவர் பஸ் கண்டக்டர் ஒருவருடன் சென்றதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த சம்பவத்துக்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது சமூக வலைதளங்களில் வைரலானதாக கூறப்படும் CCTV காட்சி. அந்த வீடியோவில், இரவு நேரத்தில் மேகா நைட்டியுடன் சில உடைமைகள் மற்றும் பைகளுடன் வீட்டை விட்டு வெளியே வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வீட்டிற்கு வெளியே ஒருவர் காத்திருப்பதும், பின்னர் இருவரும் அங்கிருந்து செல்வதும் அந்த காட்சியில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

புலம்பும் அகில்

மேகா காணாமல் போனதாக நினைத்த அகில், முதலில் அவரைத் தேடி நடவடிக்கை எடுத்ததாகவும், பின்னர் CCTV காட்சிகளை பார்த்தபோதுதான் அவர் வீட்டை விட்டு வெளியேறியிருப்பது தெரியவந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, மேகா தனது தரப்பை விளக்கும் வகையில் வெளியிட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவியது. அந்த வீடியோ தற்போது நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதில், தங்களது திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் இருந்ததாகவும், அதற்கு அகிலின் நடவடிக்கைகளே காரணம் என்றும் மேகா கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அகிலுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, இந்த விவகாரம் இரு தரப்பினரின் தனிப்பட்ட வாழ்க்கையைத் தாண்டி சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது.

அகிலின் நண்பர் கூறியது என்ன

இதற்கிடையே, அகிலின் நெருங்கிய நண்பரும் பிக்பாஸ் பிரபலமுமான சாய் கிருஷ்ணா இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார். அகில் மிகுந்த மனவேதனையில் இருப்பதாக கூறிய அவர், தனது மனைவி குறித்து சமூக வலைதளங்களில் யாரும் அவதூறாக பேசுவதை அகில் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். நடந்த சம்பவத்தை ஏற்றுக்கொண்டு தனது வாழ்க்கையை மீண்டும் தொடர அகில் முயற்சி செய்து வருவதாகவும் சாய் கிருஷ்ணா கூறியுள்ளார்.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
வைரல் இன்ஸ்டாகிராம் வ்ளாகருக்கு நடந்த சோகம்: பஸ் கண்டக்டருடன் ஓடிய மனைவி!
PulseNews சுருக்கம்

கேரளாவைச் சேர்ந்த பிரபல இன்ஸ்டாகிராம் வ்ளாகர் மற்றும் யூடியூபரான அகில் NRD-யின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது அன்றாட நிகழ்வுகள் மற்றும் நகைச்சுவை சம்பவங்களை வீடியோக்களாகப் பகிர்ந்து வந்த அகிலின் மனைவி மேகா, அரசுப் பேருந்து நடத்துனர் ஒருவருடன் சென்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல ஆண்டுகளாகத் தனது குடும்ப விவகாரங்களை இணையத்தில் பகிர்ந்து வந்த அகிலின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் திருப்பம், அவரது பின்தொடர்பவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu