பெங்களூரு: பிரபல ஓட்டல்களில் இருந்து 132 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
பெங்களூரு ஓட்டல் சோதனை செய்தி: பிரபல நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் உணவுத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 132 கிலோ கெட்டுப்போன இறைச்சி, மீண்டும் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய், கெட்டுப்போன பால் மற்றும் காய்கறிகள் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டல்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. Bengaluru hotel raid news: Food safety officials seize 132 kg stale meat, reused cooking oil, spoiled milk and vegetables from star hotels & recreation clubs, issuing notices over serious hygiene and public health violations.

பெங்களூருவில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாகச் சோதனை நடத்தினர். இந்த ஆய்வின் போது, 132 கிலோ கெட்டுப்போன இறைச்சி, தரமற்ற நிலையில் இருந்த காய்கறிகள், பால் மற்றும் மீண்டும் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட சம்பந்தப்பட்ட ஓட்டல்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். சுகாதார விதிமீறல்களில் ஈடுபட்ட இந்த நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.