PulseNews
தமிழகம்

TN Assembly Live Updates: தமிழக சட்டசபை கூட்டம் - 2 வது நாளாக மானியக் கோரிக்கை விவாதம்

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி தொடங்கியது. இதில் முதல் நாளில், நிதியமைச்சர் மரிய வில்சன், பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 6-ந் தேதி வேளாண் அமைச்சர் வினோத், வேளாண் துறைக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 7-ந் தேதி பட்ஜெட் மீதூன விவாதங்கள் நடைபெற்றது. சுதந்திர தினம் உள்ளிட்ட 4 நாட்கள் விடுமுறையை தொடர்ந்து நேற்று (ஆகஸ்ட் 17) சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியது. இதில் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் அருண்ராஜ் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தனர். பயிர்க்கடன் கூடுதல் தள்ளுபடி - சட்டப்பேரவையில் விஜய் அறிவிப்பு ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். 75,000 முதல் ரூ.1 லட்சம் வரை பயிர் கடன் பெற்றவர்களுக்கு கூடுதலாக ரூ.40,000 தள்ளுபடி செய்யப்படும். ரூ.1 லட்சத்திற்கு மேல் பயிர்க்கடன் வாங்கியவர்களுக்கு ரூ.35,000 வரை தள்ளுபடி செய்யப்படும். மருத்துவ துறையில் கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்படும் - அமைச்சர் அருண்ராஜ் மருத்துவத் துறையில் முதற்கட்டமாக 2,500 செவிலியர் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்படும். 284 உயர் சிறப்பு மருத்துவ பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும். ரூ.51 கோடியில் நலம் - ஒருங்கிணைந்த கட்டணமில்லா உடல்நலப் பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்படும். 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆண்டுக்கு ஒருமுறை 14 அடிப்படை பரிசோதனைகள் செய்யப்படும் என அமைச்சர் அருண்ராஜ் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
TN Assembly Live Updates: தமிழக சட்டசபை கூட்டம் - 2 வது நாளாக மானியக் கோரிக்கை விவாதம்
PulseNews சுருக்கம்

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் நிதியமைச்சர் மரிய வில்சன் பொது பட்ஜெட்டையும், மறுநாள் ஆகஸ்ட் 6-ம் தேதி வேளாண் அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டையும் தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 7-ம் தேதி பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றன.

சுதந்திர தினம் உள்ளிட்ட நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு, சட்டப்பேரவை கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 17) மீண்டும் கூடியது. தற்போது இரண்டாவது நாளாக பல்வேறு துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu