குளத்திலேயே வாழும் சிறுவன்... புது வாழ்வு அளிக்கும் ஆனந்த்அம்பானி..!
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இக்பால் என்ற சிறுவன், மர்மமான உடல்நலப் பிரச்சினையால் பெரும்பாலான நேரத்தை குளங்களிலேயே கழித்து வந்த நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் அம்பானியின் தலையீட்டின் மூலம் மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இக்பால் என்ற சிறுவன், மர்மமான உடல்நலக் குறைபாடு காரணமாக தனது நேரத்தின் பெரும்பகுதியை குளத்திலேயே கழிக்கும் அவல நிலையில் இருந்தார். இந்தத் தகவலை அறிந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் அம்பானி, சிறுவனுக்கு உதவ முன்வந்தார்.
அவரது முயற்சியால் இக்பால் மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் முறையான சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சிகிச்சையின் மூலம் சிறுவன் தனது பழைய வாழ்க்கையைத் துறந்து, புதிய வாழ்க்கையை நோக்கி அடியெடுத்து வைக்கிறார்.