PulseNews
தமிழகம்

காரை தடுத்து நிறுத்த முயன்ற காவலர்; உயிர் பயத்தைக் காட்டிய ஓட்டுநர்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து காவல்துறையினர் தொடர்ந்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், கான்பூரின் ராவத்பூர் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காவலர் ஒருவர் அந்த வழியாக விதிகளை மீறி வேகமாக வந்த ஒரு காருக்கு அபராதம் விதிக்க, அந்த காரை நிறுத்த முயன்றார். ஆனால், அந்த ஓட்டுநர் காரை நிறுத்தாமல் மின்னல் வேகத்தில் தப்பிச் செல்ல முயன்றார். இதனால் நிலைதடுமாறிய அந்த காவலர் தற்காப்பிற்காக, அந்த காரின் முன்பக்க போனட்டைப் பிடித்தார். இருப்பினும், அந்த கார் நிற்காமல் சென்றதால் அவர் தொங்கியபடியே உயிருக்கு ஆபத்தான நிலையில் காரின் மேல் படுத்தவாறே சென்றார். ஆனாலும், அந்த ஓட்டுநர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். இதனால், அந்த காவலர் சிறிது தூரம் வரை கொடூரமாக இழுத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து, அந்த காரின் பதிவு எண்ணை வைத்து வாகனத்தை காவல்துறையினர் அடையாளம் கண்டு ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சாலையில் அன்றாடம் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களின் உயிருக்கு உரிய பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக காவல்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
காரை தடுத்து நிறுத்த முயன்ற காவலர்; உயிர் பயத்தைக் காட்டிய ஓட்டுநர்
PulseNews சுருக்கம்

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ராவத்பூர் சந்திப்பில் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விதிமுறைகளை மீறி வேகமாக வந்த கார் ஒன்றை, போக்குவரத்து காவலர் ஒருவர் தடுத்து நிறுத்தி அபராதம் விதிக்க முயன்றார்.

காவலர் தடுத்தும் நிற்காமல், அந்த காரின் ஓட்டுநர் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்தார். இந்த ஆபத்தான செயலால் காவலரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் உருவானது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu