PulseNews
தமிழகம்

மண்ணுக்கு அடியில் அழுகுரல்; நேபாளத்தில் நெகிழ்ச்சி

நேபாளத்தில், கடந்த 26 ஆம் தேதி பனிப்பாறை உடைந்து விழுந்ததில் கோட்டாகோஷி ஆற்றில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. இந்த பெரு வெள்ளம் சகதி மற்றும் பாறைகளை அடித்துச் சென்ற அதே வேளையில் அப்பகுதியில் இருந்த வீடுகள் மற்றும் கட்டமைப்புகளையும் அடித்துச் சென்றது. இந்த பேரிடரில் பல ஆயிரம் பேர் காணாமல் போனதாகக் கூறப்படும் நிலையில், உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 900 கடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ரசுவா மாவட்டத்​தில் உள்ள திமுரே கிராமத்​தில் கடந்த சனிக்​கிழமை மாலை மீட்புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்த காவல் படையைச் சேர்ந்த அதி​காரி​கள் மண்​ணுக்கு அடி​யில் இருந்து மெல்​லிய அழுகுரலைக் கேட்​டனர். இதையடுத்து, அப்பகுதியில் யாரோ இடுக்கில் சிக்கியிருக்கிறார்கள் என்பதை உணர்ந்த மீட்புக் குழுவினர், உடனடியாக அந்த பகுதியில் உள்ள இடிபாடுகளைக் களைந்து அப்பகுதியில் உள்ள சகதிகளை அகற்றினர். அப்போது, அப்பகுதியில் 6 வயது சிறுமி இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு அந்த சிறுமி உயிருடன் மீட்கப்பட்டார். முன்னதாக முதலுதவி அளிக்கப்பட்ட அந்த சிறுமி, ஹெலிகாப்டர் மூலமாக காத்மண்ட்டில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 4 நாட்களாகச் சகதிகளுக்கிடையில், இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிய சிறுமி உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. முன்னதாக அதே பகுதியில், அந்த சிறுமியின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மண்ணுக்கு அடியில் அழுகுரல்; நேபாளத்தில் நெகிழ்ச்சி
PulseNews சுருக்கம்

நேபாளத்தில் கடந்த 26-ம் தேதி ஏற்பட்ட பனிப்பாறை சரிவால் கோட்டாகோஷி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு உண்டானது. இந்த பேரிடரால் சகதி, பாறைகள் மற்றும் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதில், பல ஆயிரம் பேர் காணாமல் போன நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ரசுவா மாவட்டத்தின் திமுரே பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மண்ணுக்கு அடியில் சிக்கியவர்களின் அழுகுரல் கேட்டதையடுத்து, அங்கு மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu