PulseNews
தமிழகம்

“முதல்வர் விஜய் ஒரு லட்சிய இலக்கை நமக்கு நிர்ணயித்துள்ளார்” - அமைச்சர் கீர்த்தனா பேச்சு!

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், தமிழ்நாடு அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்புத் துறை சார்பில் ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’ இன்று (13.08.2026) நடைபெற்றது. த.வெ.க. அரசின் முதல் முதலீட்டு மாநாடான இந்நிகழ்ச்சியை, தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முறைப்படி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் முதலீட்டாளர்கள் மத்தியில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா பேசுகையில், “ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு, தரவுகளைப் பார்க்கிறீர்கள், அபாயங்களை மதிப்பிடுகிறீர்கள். மற்ற மாநிலங்கள் மற்றும் நாடுகளுடன் எங்களை ஒப்பிட்டுப் பார்த்து, இறுதியாகத் தமிழ்நாட்டில்தான் உங்கள் முதலீட்டைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறீர்கள். அதை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. உங்கள் மூலதனத்தை எங்களை நம்பி ஒப்படைத்திருக்கும் போது, அந்த மூலதனம் விரைவாகவும், பயனுள்ளதாகவும், திட்டமிட்டபடியும் செயல்படுவதை உறுதி செய்யும் கடமை எங்களுக்கு உள்ளது. முதலமைச்சர் விஜய், 2036ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த வேண்டும் என்ற ஒரு லட்சிய இலக்கை நமக்கு நிர்ணயித்துள்ளார். இது ஒரு பெரிய எண், ஆனால் இது ஏற்படுத்தப் போகும் தாக்கம் அதைவிடப் பெரியது. ஒரு இளம் பட்டதாரிக்கு இந்த வளர்ச்சி என்பது ஒரு சிறந்த வேலை வாய்ப்பு. ஒரு பெண்ணிற்கு இது பொருளாதார சுதந்திரம். ஒரு தொழில்முனைவோருக்கு இது துணிச்சலுடன் புதிய முயற்சிகளை எடுப்பதற்கான நம்பிக்கை. ஒரு குடும்பத்திற்கு இது அடுத்த கட்ட வாழ்வாதார உயர்வு. இன்று தனது முதல் தொழில்துறை முதலீட்டைப் பெறும் இராமநாதபுரம் போன்ற ஒரு மாவட்டத்திற்கு இதன் அர்த்தம் என்னவென்றால், அங்குள்ள இளைஞர்கள் வேலை தேடித் தங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை என்பதாகும்” எனத் தெரிவித்தார்.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“முதல்வர் விஜய் ஒரு லட்சிய இலக்கை நமக்கு நிர்ணயித்துள்ளார்” - அமைச்சர் கீர்த்தனா பேச்சு!
PulseNews சுருக்கம்

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தமிழ்நாடு அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்புத் துறை சார்பில் ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’ இன்று நடைபெற்றது. த.வெ.க. அரசின் முதல் முதலீட்டு மாநாடாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் பேசிய தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, முதலமைச்சர் விஜய் தங்களுக்கு ஒரு லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளதாகக் குறிப்பிட்டார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு தரவுகளை ஆய்வு செய்வது மற்றும் அபாயங்களை மதிப்பிடுவது குறித்து அவர் பேசினார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu