PulseNews
தமிழகம்

சாலை ஓரம் அமர்ந்திருந்த சிறார்களுக்கு நேர்ந்த சோகம் : முதல்வர் விஜய் இரங்கல்!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் கொல்லப்பட்டி - புத்தூர் சாலையில் நிகழ்ந்த வாகன விபத்தில் உயிரிழந்த சிறுவர்கள் மற்றும் காயமடைந்தோரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கொல்லப்பட்டி கிராமத்தில் இன்று (30.08.2026) சாலையின் ஓரத்தில் அமர்ந்திருந்த புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலையம்மான் (வயது 60), அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் யோகவர்ஷினி (வயது 11), அனன்யா (வயது 6), தனுஸ்ரீ (வயது 7) மற்றும் போஸ்கிரண் (வயது 6) ஆகியோர் மீது மகேந்திரா தோஸ்த் வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 5 பேரும் சிகிச்சைக்காகத் திண்டுக்கல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் நான்கு குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர் என்ற தூயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அஞ்சலையம்மாளுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு குழந்தைகளின் பெற்றோர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்தார்.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சாலை ஓரம் அமர்ந்திருந்த சிறார்களுக்கு நேர்ந்த சோகம் : முதல்வர் விஜய் இரங்கல்!
PulseNews சுருக்கம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம், கொல்லப்பட்டி - புத்தூர் சாலையில் இன்று (30.08.2026) நிகழ்ந்த வாகன விபத்தில், சாலையோரம் அமர்ந்திருந்த புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலையம்மான் (60) மற்றும் அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுமிகள் யோகவர்ஷினி (11), அனன்யா ஆகியோர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கும் முதலமைச்சர் ஆறுதல் கூறியுள்ளதுடன், அவர்களுக்குத் தேவையான நிதியுதவியையும் அறிவித்துள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu