PulseNews
தமிழகம்

“இப்படி பேசுனா எத்தனை மணிக்கு முடிக்கிறது?” - காங்கிரஸ் அமைச்சரை கலாய்த்த கே.என்.நேரு!

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நேற்று நகராட்சி நிர்வாகத் துறை சார்ந்த மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் எழுந்து பேசுகையில், “59 ஆண்டுகள் கழித்து முடியாது என்றார்கள், முடியாது என்றார்கள். அரசியல் நகர்வுகள் நடக்காது என்றார்கள், முடியாது என்றார்கள் நடக்காதது என்றார்கள்... அரசியல் பகல் கனவு என்றார்கள், சாத்தியமே இல்லை என்று சொன்னார்கள்.. அரசியல் வியாக்கியானம் பேசுகிறார்கள் என்று சொன்னார்கள்.. மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் மட்டுமே கூட்டணி ஆட்சி என்று சொன்னார்கள். 2024 விக்கரவாண்டி மாநாட்டில், 2024 விக்கரவாண்டி மாநாட்டில் விஜய் அறிவித்தார்கள், உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அறிவித்தார்கள்” என்று கவிதை நயத்தோடு கூட்டணி ஆட்சி பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, “உயர்கல்வித் துறை அமைச்சர், அந்த உயர்கல்வி மானியத்தை விட்டு அரசியல் பேசுகிறார். நீங்க, முடியாது என்கிறார்கள், தர முடியாது என்று சொன்னார்கள், தரேன்னு சொல்லிட்டு ஏமாற்றினால் தான் தப்பு. நாங்க தர முடியாது தனித்து நிற்போம் என்று சொன்னோம். தர முடியாது என்று சொன்னார்கள், வாய்ப்பில்லை என்று சொன்னார்கள், பார்க்க முடியாது என்று சொன்னார்கள் என்று ஒவ்வொரு வார்த்தையும் இரண்டு இரண்டு முறை பேசுகிறார். அவர் கவிஞராக இருக்கலாம், ஆனால் அதுக்காக இரண்டு இரண்டு தடவையா பதிவு பன்றது? இரண்டு இரண்டு வரியாக பதிவு செய்தால் எத்தனை மணிக்கு இதை முடிக்கிறது?” என்று கூறியதும் அவையில் சிரிப்பலை எழுந்தது.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“இப்படி பேசுனா எத்தனை மணிக்கு முடிக்கிறது?” - காங்கிரஸ் அமைச்சரை கலாய்த்த கே.என்.நேரு!
PulseNews சுருக்கம்

தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக, நகராட்சி நிர்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் எழுந்து, அரசியல் நகர்வுகள் மற்றும் அது தொடர்பான விமர்சனங்கள் குறித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

அமைச்சர் நீண்ட நேரம் உரையாற்றிக்கொண்டிருந்ததைக் கவனித்த அமைச்சர் கே.என்.நேரு, "இப்படிப் பேசிக்கொண்டே இருந்தால், எப்போதுதான் உரையை முடிப்பீர்கள்?" என்று கிண்டலாகக் கேட்டார். அவரது இந்த நகைச்சுவையான பேச்சு அவையில் கலகலப்பை ஏற்படுத்தியது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu