இந்தியாவில் எல்பிஜி உற்பத்தி செய்வதற்கு முதல் முறையாக இலக்கு நிர்ணயித்த மத்திய அரசு
இந்திய எல்பிஜி உற்பத்தி இலக்கு: சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்க மத்திய அரசு முதல் முறையாக நாளொன்றுக்கு 63,810 டன் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி கட்டாய இலக்கு நிர்ணயித்து, 21 அரசு-தனியார் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு பங்கீடு வழங்கியது. Centre mandates daily output of 63,810 tonnes across 21 refineries to curb future LPG shortages, cut import dependence and strengthen energy security amid West Asian tensions.

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் நோக்கில், இந்தியாவில் முதன்முறையாக உள்நாட்டு எல்பிஜி உற்பத்திக்கான இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதன்படி, நாளொன்றுக்கு 63,810 டன் எல்பிஜி உற்பத்தி செய்யப்பட வேண்டும் என 21 அரசு மற்றும் தனியார் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடுகளுடனான பதற்றமான சூழலில் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யவும், இறக்குமதியை குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.