குன்னூர் அருகே சிறுத்தைகள் நடமாட்டம்..! - பொதுமக்கள் பீதி
குன்னூர் சிறுத்தை அச்சம்: குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் சிறுத்தைகள் உலா வருவதால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் பீதியில் உள்ளனர், வனத்துறை நடவடிக்கை இல்லையென மக்கள் குற்றச்சாட்டு, கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை வலுத்து வருகிறது. Coonoor leopard scare: Leopards roaming residential areas at night and resting in nearby tea estates by day have triggered fear among workers and locals, with residents alleging no forest department action and demanding cage-trapping of the animals.

குன்னூர் பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் தேயிலைத் தோட்டங்களில் இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்கள் மற்றும் தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். பகல் நேரங்களில் இந்த சிறுத்தைகள் தேயிலைத் தோட்டங்களில் தங்குவதாகவும் கூறப்படுகிறது.
வனத்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, சிறுத்தைகளைக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களிடையே வலுத்துள்ளது.