‘தனித்தொகுதி’ என்ற சொல்லை மாற்றுக!.. சட்டமன்றத்தில் தவெக எம்எல்ஏ வைத்த முக்கிய கோரிக்கை!!
Rename Reserved Constituency: தமிழ்நாடு சட்டமன்றத்தில் 'தனித்தொகுதி' என்ற சொல் பாகுபாடு மற்றும் தண்டனையைக் குறிப்பதாக உள்ளது என்றும், அதற்குப் பதிலாக 'சிறப்புத் தொகுதி' அல்லது 'உரிமைத் தொகுதி' எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் தவெக சட்டமன்ற உறுப்பினர் சிந்து கோரிக்கை விடுத்துள்ளார். இக்கோரிக்கையை முதலமைச்சர் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் உறுதி அளித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய தவெக எம்எல்ஏ சிந்து, 'தனித்தொகுதி' என்ற சொல் சமூகப் பாகுபாட்டையும் தண்டனையையும் உணர்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்தச் சொல்லை மாற்றி 'சிறப்புத் தொகுதி' அல்லது 'உரிமைத் தொகுதி' என்று அழைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்தக் கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் உறுதியளித்துள்ளார்.