“மன வேதனை... அனைவரையும் மீட்க பிரார்த்திக்கிறேன்” - சிம்பு
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் உள்ள திபெத் எல்லைப் பகுதியில் நேற்று திடீரென பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்கால் ஆற்றங்கரையோரத்திலிருந்த பல்வேறு கட்டிடங்கள், வாகனங்கள், ஆற்றின் குறுக்கே இருந்த பாலங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன. மேலும் தற்போது வரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் 1000க்கு மேற்பட்டோர் காணாமல் போய்விட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. மேலும், நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக நேபாளத்திற்கு யாத்திரைச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்று தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. வெள்ளத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் அந்நாட்டு அரசு தீவிரமாக இறங்கி வருகிறது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலையையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இச்சமபவத்துக்கு நடிகர் சிம்பு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பேரழிவைக் காண்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்காகவும் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் இன்னும் மீட்கப்படக் காத்திருப்பவர்களுக்காகவும் பிரார்த்திக்கிறேன். அவர்களின் பாதுகாப்பாகவும் வலிமையாக இருப்பதற்காகவும் பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். Heartbreaking to see the devastation caused by the floods in Nepal. My prayers are with the families who have lost their loved ones, everyone affected, and all those still waiting to be rescued. Praying for their safety and strength. 🙏🏻 — Silambarasan TR (@SilambarasanTR_) August 26, 2026

நேபாளத்தின் திபெத் எல்லைப் பகுதியில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் அங்குள்ள பாலங்கள், வாகனங்கள் மற்றும் கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த இயற்கை பேரிடரில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 1000-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அங்கு சுற்றுலா சென்ற இந்தியர்களில் 100-க்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இந்தத் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவரையும் மீட்க இறைவனிடம் பிரார்த்திப்பதாக நடிகர் சிம்பு தனது ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.