ஜப்பானில் கடும் வெப்பம் நிலவும் நிலையில் செல்லப்பிராணிகளை பாதுகாக்க நடவடிக்கை..!
ஜப்பானில் கடும் வெப்பம் நிலவும் நிலையில், நாய்கள் மற்றும் பூனைகளின் உடல் வெப்பத்தை குறைக்க மின்விசிறி பொருத்தப்பட்ட ஆடைகளை செல்லப்பிராணி உரிமையாளர்கள் அதிகமாக வாங்கி வருகின்றனர். ஆடைகளில் இணைக்கப்பட்ட எடை குறைந்த பேட்டரி விசிறி காற்று சுழற்சியை ஏற்படுத்துகிறது. கழுத்து பகுதியில் கட்டப்பட்ட ஐஸ் கட்டிகள் நிரப்பிய பைகள் காற்றை குளிரச் செய்து உடல் முழுவதும் பரப்புகிறது. வெப்பத்தால் பாதிக்கப்படும் செல்லப்பிராணிளுக்கு பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கவும் இது உதவுகிறது.

ஜப்பானில் நிலவி வரும் கடும் வெப்பத்திலிருந்து செல்லப்பிராணிகளைப் பாதுகாக்க, நாய்கள் மற்றும் பூனைகளுக்கான மின்விசிறி பொருத்தப்பட்ட பிரத்யேக ஆடைகளை உரிமையாளர்கள் அதிக அளவில் வாங்கி வருகின்றனர். இந்த ஆடைகளில் உள்ள எடை குறைந்த பேட்டரி மூலம் இயங்கும் விசிறிகள், உடலின் வெப்பநிலையை குறைக்க காற்று சுழற்சியை உருவாக்குகின்றன.
மேலும், கழுத்துப் பகுதியில் ஐஸ் கட்டிகள் நிரப்பப்பட்ட பைகளை அணிவிப்பதன் மூலம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க முடிகிறது. கடும் வெப்பத்தால் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் பக்கவாதம் போன்ற பாதிப்புகளைத் தடுக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பெரிதும் உதவுகின்றன.