ஊருக்கே சோறு போட்டேன்.. என் மகனை விட்டுட்டேன்.. கண்ணீர் மல்க பேசிய சூரியின் அம்மா!

ஊருக்கே நான் சமைத்துப்போட்ட தருணத்தில் எனது மகன் தண்ணீர் குடித்து பசியைப் போக்கினான் என நடிகர் சூரியின் அம்மா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

பிரமாண்டமாக உருவாகும் மண்டாடி படம்

காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக மாறியிருக்கும் சூரி அடுத்தடுத்து கதைக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் மண்டாடி படம் வரும் செப்டம்பர் 10ம் தேதி ரிலீசாகவுள்ளது. மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இந்த படத்தில் மகிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், பால சரவணன், ரவீந்திர விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மண்டாடி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதன் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

தண்ணீர் குடித்து பசியைப் போக்கிய சூரி

மண்டாடி படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் பேசிய நடிகர் சூரியின் அம்மா, என்னுடைய மகன் இவ்வளவு கஷ்டப்பட்டு மேடையில் ஏறுவான் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. உங்க எல்லாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒருநாள் எங்கள் ஊரில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்வில் எத்தனையோ பேருக்கு நான் சோறு சமைத்து உபசரித்தேன். என் மகன் சூரி அந்த நேரம் போன் பண்ணினான். என்னப்பா என கேட்டதற்கு அம்மா உன்னை நினைச்சி நான் போன் பண்ணினேன் என கூறினான். நீ எங்க தான் இருக்கன்னு எனக்கு தெரியல, இப்ப நீ என்ன பண்ற சாப்பிட்டியான்னு கேட்டேன். அதுக்கு நான் குழாயை தொறந்து பச்ச தண்ணியை குடிச்சிட்டு படுத்துட்டேன்மா அப்படின்னு சூரி சொன்னான். என்னால் அதைக் கேட்டு தாங்கிக் கொள்ளவே முடியவில்லை” என கண் கலங்கியபடி கூறினார்.

என்னை பேச விட்டால் நன்றாகவே பேசுவேன். ஆனால் இப்போது அழுகை தான் வருகிறது என அவர் சொன்னார். இதனைக் கேட்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் நெகிழ்ந்து போயினர். சூரி சினிமாவில் நடிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக முயற்சி செய்து கிடைத்த சிறு வேடங்களில் எல்லாம் தலை காட்டி வெண்ணிலா கபடி குழு மூலம் நகைச்சுவை நடிகராக எண்ட்ரீ கொடுத்தார். பின்னர் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த அவர், தற்போது ஹீரோவாகவும் ஜொலித்து வருகிறார். சினிமாவில் நடிக்க வரும் முன் சூரி பார்க்காத வேலையே இல்லை என்னும் அளவுக்கு பல பணிகளை மேற்கொண்டுள்ளார். அதில் பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்களின் படங்களில் ஷூட்டிங் பணியாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள 'மண்டாடி' திரைப்படம் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சத்யராஜ், மகிமா நம்பியார், சுஹாஸ் மற்றும் பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக, நடிகர் சூரியின் தாய் தனது கடந்த கால வாழ்க்கை குறித்து உணர்ச்சிகரமாகப் பகிர்ந்து கொண்டார். ஊருக்கே தான் சமைத்துப் பரிமாறிய காலங்களில், தனது மகனான சூரி தண்ணீர் குடித்து பசியைப் போக்கிக்கொண்ட அந்த துயரமான தருணங்களை அவர் கண்ணீர் மல்க நினைவு கூர்ந்தார்.