கிருஷ்ணன் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசிய பெயிண்டிங் தொழிலாளர்கள் கைது..!
திருச்சி பாலக்கரையில் கஞ்சா போதையில் கிருஷ்ணன் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் பெயிண்டிங் தொழிலாளர்களான 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தை நேரில் கண்ட நபர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொண்ட போலீசார், அசாம்பாவித சம்பவத்தை வீடியோ எடுத்து இன்ஸ்டா.வில் பதிவிட்ட மற்றொரு இளைஞரை தேடி வருகின்றனர்.

திருச்சி பாலக்கரையில் கஞ்சா போதையில் இருந்த பெயிண்டிங் தொழிலாளர்கள் இருவர், அப்பகுதியில் உள்ள கிருஷ்ணன் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் அந்த இரண்டு இளைஞர்களையும் கைது செய்தனர்.
இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மற்றொரு நபரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.