விஜயகாந்த் - எஸ்ஏ சந்திரசேகர் நடிப்பில் உருவான படங்கள் இத்தனையா? எத்தனை ஹிட்?

தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றவர்களில் மிகவும் முக்கியமானவர்.

விஜயகாந்தின் திரைவாழ்வில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக திகழ்ந்தவர் எஸ்ஏ சந்திரசேகர். அவரது இயக்கத்தில் விஜயகாந்த் மொத்தம் 19 படங்கள் நடித்துள்ளார். அந்த படங்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1. சட்டம் ஒரு இருட்டறை:

விஜயகாந்தின் திரை வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படம் சட்டம் ஒரு இருட்டறை. ஆக்ஷன் திரைப்படமான இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 1981ம் ஆண்டு இ்ந்த படம் வெளியாகியது.

2. நெஞ்சில் துணிவிருந்தால்:

1981ம் ஆண்டு வெளியான இந்த படம் நெஞ்சில் வெற்றிப்படமாக அமைந்தது. ஆக்ஷன் குடும்ப படமான இந்த படமும் வெற்றிப்படமாக அமைந்தது. இதனால், இவர்கள் கூட்டணி மீது எதிர்பார்ப்பு அப்போது ஏற்பட்டது.

3.ஜாதிக்கொரு நீதி:

அடுத்தடுத்து 2 படங்கள் வெற்றி பெற்ற நிலையில், 3வதாக உருவான இந்த படம் பெரிய வெற்றி பெறவில்லை. ஓரளவு சுமாரான வெற்றி பெற்றது.

4. நீதி பிழைத்தது:

1981ம் ஆண்டு வெளியான இந்த படம் பெரியளவு வெற்றி பெறவில்லை. அந்த காலகட்டத்தில் 40 லட்சம் வசூல் செய்தது.

5. பட்டணத்து ராஜாக்கள்:

1982ம் ஆண்டு வெளியான இந்த படம் மீண்டும் விஜயகாந்த் - சந்திரசேகர் கூட்டணியில் மீ்ண்டும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படம் 0.85 லட்சம் வசூலைக் குவித்தது.

6.ஓம் சக்தி:

1982ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் விஜயகாந்த் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால், 50 லட்சம் ரூபாய் வசூலைக் குவித்தது.

7.சாட்சி:

1983ம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ரூபாய் 1.25 கோடி வசூலைக் குவித்தது. இதில் விஜயகாந்த் நேர்மையான வழக்கறிஞராக நடித்திருப்பார்.

8. வெற்றி:

1984ம் ஆண்டு வெளியான இந்த படம் வெற்றி பெற்றது. இந்த பம் அப்போதே ரூபாய் 1 கோடி வசூலைக் குவித்தது. பயமற்ற ஒரு நபராக இந்த படத்தில் விஜயகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் முதன்முறையாக விஜய் அறிமுகமானார்.

9.வீட்டுக்கு ஒரு கண்ணகி:

1984ம் ஆண்டு வெளியான இந்த படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. இந்த படம் சுமார் 48 லட்சம் வசூலைக் குவித்துள்ளது. அன்பான கணவன் மற்றும் மகனாக இந்த படத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார்.

10. குடும்பம்:

1984ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் விஜயகாந்த் ஒரு பொறுப்புள்ள குடும்பத் தலைவராக நடித்திருப்பார். 45 லட்சம் ரூபாய் வசூலைக் குவித்துள்ளது. குடும்ப படமான இந்த படம் அப்போது சுமாரான வெற்றியைப் பெற்றுள்ளது.

11. புதுயுகம்:

1985ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் புரட்சிகரமான இளைஞராக விஜயகாந்த் நடித்திருப்பார். இந்த படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. 55 லட்சம் ரூபாய் வரை வசூலை இந்த படம் குவித்தது.

12. நீதியின் மறுபக்கம்:

1985ம் ஆண்டு வெளியான இந்த படம் நல்ல வெற்றியைப் பெற்றது. இந்த படத்திலும் விஜயகாந்த் வழக்கறிஞராக நடித்திருப்பார். 90 லட்சம் ரூபாய் வசூலைக் குவித்தது. எஸ்ஏ சந்திரசேகர் - விஜயகாந்த் கூட்டணிக்கு கம்பேக்காக அமைந்தது.

13. எனக்கு நானே நீதிபதி:

1986ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் விஜயகாந்த் சட்டத்தை கையில் எடுக்கும் நபராக நடித்திருப்பார். இது ஒரு ஆக்ஷன் பழிவாங்கும் படமாக இருருக்கும். இந்த படம் சுமார் 88 லட்சம் ரூபாய் வசூலைக் குவித்துள்ளது.

14. வசந்த ராகம்:

1986ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் வசந்த ராகம் படம் ஒரு காதல் கதைக்களம் ஆகும். காதல் திரைப்படமான இந்த படம் ரூபாய் 46 லட்சம் வசூலைக் குவித்தது,

15. சட்டம் ஒரு விளையாட்டு:

1987ம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு விளையாட்டு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் அப்போதே சுமார் 1 கோடி வசூலைக் குவித்தது. புத்திசாலித்தனமான வழக்கறிஞராக நடித்திருப்பார்.

16. ராஜநடை:

1989ம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் அப்போதே ரூபாய் 1 கோடி வசூலைக் குவித்தது. கிராமத் தலைவராக இந்த படத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார்.

17. செந்தூரப்பாண்டி:

1993ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் விஜயகாந்த் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ரூபாய் 2.25 கோடி வசூலைக் குவித்துள்ளது.

18.பெரியண்ணா:

1999ம் ஆண்டு ரூபாய் 1.50 கோடி வசூலைக் குவித்தது. இந்த படத்திலும் அவர் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

19. ராஜதுரை:

1999ம் ஆண்டு வெளியான இந்த படம் ஆக்ஷன் குடும்ப படமாக அமைந்தது. மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றவர்களில் மிக முக்கியமானவராகக் கருதப்படுபவர் மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் ஆவார். இவரது திரைப்பயணத்தில் தவிர்க்க முடியாத இயக்குனராக எஸ்.ஏ. சந்திரசேகர் திகழ்ந்தார்.
இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் விஜயகாந்த் மொத்தம் 19 படங்களில் நடித்துள்ளார். இதில் 'சட்டம் ஒரு இருட்டறை' திரைப்படம் விஜயகாந்தின் சினிமா வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய படைப்பாக அமைந்தது.