களியக்காவிளையில் கஞ்சா போதையில் இளைஞர்கள் ரகளை.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை மார்க்கெட்டில் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை பிடிக்க போலீசார் சென்ற நிலையில் ஒருவர் மட்டுமே சிக்கியதால் போலீசார் அவரை அழைத்துச் செல்ல முயன்ற போது பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல் உதவி ஆய்வாளரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்கள் மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் கஞ்சா பயன்படுத்தியதை நிரூபித்தால் தாங்களே அழைத்து வருவதாகவும் அவர்கள் போலீசாரிடம் கூறும் வீடியோ காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை மார்க்கெட் பகுதியில், கஞ்சா போதையில் இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், அந்த இளைஞர்களில் ஒருவரை மட்டும் பிடித்து அழைத்துச் செல்ல முயன்றனர்.
அப்போது அந்த இளைஞரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், காவல் உதவி ஆய்வாளரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்கள் மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் கஞ்சா பயன்படுத்தியதை நிரூபித்தால் தாங்களே காவல் நிலையத்திற்கு அழைத்து வருவதாகவும் அவர்கள் கூறுவது போன்ற வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.