PulseNews
தமிழகம்

“உண்மையிலே இந்த படம் ஓடாதா?” - உதயநிதி சொன்ன வார்த்தையால் பேரவையில் சிரிப்பலை!

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், துறைகள் ரீதியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (27-08-26) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதித்துறை ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று அதன் பிறகு அறிவிப்புகள் வெளியாக இருந்தது. அதன்படி பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதித்துறை ஆகிய துறைகளின் அமைச்சர்கள் மானியக் கோரிக்கையை தாக்கல் செய்தனர். அதனை தொடர்ந்து துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகளையும் உடனே வெளியிட்டனர். மானியக் கோரிக்கை மீதான கேள்விகளுக்கு பதிலுரை வழங்குவதற்கு முன்பே அமைச்சர்கள் அறிவிப்புகளை வெளியிட்டதாக திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக தங்கம் தென்னரசு பேசியதாவது, “ஒரு திரைப்படத்துக்கு கிளைமாக்ஸ் கடைசியாக தான் இருக்கும். எப்படியும் இரண்டு மணி நேரம் இருக்கத்தானே போறீங்க, இதெல்லாம் பார்க்க தானே போறீங்க. அதனால் போய் உட்கார்ந்த உடனே கிளைமாக்ஸை முதலில் போட்டு, அதன் பிறகு முழு படத்தை பார்த்து கருத்து தெரிவிக்கலாம் என்று சொன்னால் அது சரியாக இருக்குமா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சிரித்தப்படியே பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், “என்னுடைய கருத்து என்னவென்றால் கிளைமாக்ஸையே பார்க்காமல் மக்கள் போய்விடுவார்கள் என்ற கவலை இருக்கிறது” என்று கூறினார். அதனை தொடர்ந்து பேசிய தங்கம் தென்னரசு, “கிளைமாக்ஸை நிச்சயமாக பாப்போம். காலையிலேயே பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதில் சொன்னதற்கு பிறகு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வாருங்கள் என்றீர்கள். அதன் பிறகு அறிவிப்பை முதலில் விட்டுவிட்டு அதன் பிறகு பேசுங்க என சொல்றீங்க. படுத்துக்கிட்டும் போத்திக்கலாம், போத்திக்கிட்டும் படுத்துக்கலாம் என்ற முடிவுக்கு பேரவைத் தலைவர் வந்துவிட்டீர்களா?” என்று நகைச்சுவையாகப் பேசினார். இதையடுத்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தியேட்டருக்கு போன உடனே கிளைமாக்ஸை போடுகிறார்கள் என்று தங்கம் தென்னரசு சொன்னார். அதற்கு நீங்கள், கிளைமாக்ஸை என்னவென்று தெரியாமல் போய்விடுவாங்களோ என்று சொன்னீர்கள். படம் நன்றாக இருந்தால் தியேட்டரில் மக்கள் உண்மையாக கிளைமாக்ஸ் வரைக்கும் பார்ப்பார்கள். நீங்கள் சொல்வதை பார்த்தால் இந்த படம் எப்படியும் ஓடாது, இந்த படம் நல்லா இருக்காது.. அதனால் முதலே கிளைமாக்ஸை போட்டுவோம் என்று சொல்வது மாதிரி இருக்கு” என்று சொல்ல அவையில் சிரிப்பலை எழுந்தது. இதையடுத்துப் பேசிய சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, “இப்பெல்லாம் படங்களில் இரண்டு கிளைமாக்ஸ் இருக்கிறது. எப்போதும் மாற்றத்தை விரும்ப வேண்டும். நீங்கள் ஆட்சி மாற்றத்தையே விரும்ப மாட்டிகிறீங்க. நீங்கள் நடைமுறை மாற்றத்தையும் விரும்பவில்லை என்றால் அது எப்படி சரியாக இருக்கும்” என்று பேசினார்.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“உண்மையிலே இந்த படம் ஓடாதா?” - உதயநிதி சொன்ன வார்த்தையால் பேரவையில் சிரிப்பலை!
PulseNews சுருக்கம்

தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சமூக நீதித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று (27-08-26) நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் "உண்மையிலே இந்த படம் ஓடாதா?" என்று கேட்ட கேள்வி, அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் தங்கள் மானியக் கோரிக்கைகளைத் தாக்கல் செய்தனர். அதன் பிறகு துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu