சிலிண்டர் வெ*டித்து வி*பத்து : தகரக் கொட்டகைகள் எ*ரிந்து நா*சம்!
கோவை மாநகர் நவ இந்தியா பகுதியில் 40க்கும் மேற்பட்ட தகரக் கொட்டகைகள் அமைத்து, வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். அதோடு இங்குள்ளவர்கள் அப்பகுதியில் அமைந்துள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்கள் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், தொழிலாளர்கள் அனைவரும் வழக்கம் போல் இன்று (29.08.2026) பணிக்குச் சென்றிருந்த நிலையில், திடீரென கொட்டகை ஒன்றில் இருந்த கேஸ் சிலிண்டர் ஒன்று திடீரென வெடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து சுமார் 20 சிலிண்டர்கள் வெடித்தது. அதே சமயம் உடனடியாக அங்கிருந்த பொதுமக்களும், வடமாநில தொழிலாளர்களும் தீயணைப்புத் துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற பீளமேடு மற்றும் தெற்கு தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்து விபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், அப்பகுதியில் இருந்த சிலிண்டர்களையும் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இருப்பினும், பல்வேறு தகரக் கொட்டகைகளும், வடமாநில தொழிலாளர்களின் உடைமைகளும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த சம்பவம் குறித்து பீளமேடு காவல்துறையினரும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை நவ இந்தியா பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றும் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த 40-க்கும் மேற்பட்ட தகரக் கொட்டகைகள் தீப்பிடித்து எரிந்து நாசமாகின. தொழிலாளர்கள் அனைவரும் பணிக்குச் சென்றிருந்த நிலையில், அங்குள்ள ஒரு கொட்டகையில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததே இந்த விபத்துக்குக் காரணமாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து சுமார் 20 சிலிண்டர்கள் பயங்கரமாக வெடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் ஆகஸ்ட் 29, 2026 அன்று நிகழ்ந்துள்ளது.