PulseNews
தமிழகம்

காசு கொடுத்தால் 'ஆப@த்தை' விலைக்கு வாங்கலாம்- ட்ரெண்ட் ஆகும் 'டார்க் டூரிஸம்'

சுற்றுலா என்றாலே பொதுவாக அமைதியான இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் அல்லது பொழுதுபோக்கு பூங்காக்களுக்குச் செல்வதையே மக்கள் விரும்புவார்கள். ஆனால், உலக நாடுகளின் விசித்திரமான புதிய போக்குகளுக்குப் பெயர்போன சீனாவில், தற்பொழுது முற்றிலும் மாறுபட்ட, சற்றே நெஞ்சை உறைய வைக்கும் ஒரு புதிய சுற்றுலா கலாச்சாரம் வேகமாகப் பரவி வருகிறது. ஆபத்தான இயற்கை பேரிடர்களை நிஜமாகவே அனுபவித்து, அதில் இருந்து எப்படி உயிர் தப்பிப்பது என்ற சாகசப் பயிற்சியை மக்கள் தங்களின் சொந்தப் பணத்தைக் கொடுத்துத் தேடிச் செல்லும் இந்த விசித்திரப் பழக்கம் 'டார்க் டூரிஸம்' என்ற பெயரில் தற்பொழுது உலகளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சீனாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஹாங்சோ நகரில், இளைஞர்கள் மற்றும் சாகச விரும்பிகள் மத்தியில் இந்த டார்க் டூரிஸம் கலாச்சாரம் மிகப்பெரிய டிரெண்டாக மாறியுள்ளது. அங்குள்ள லூக்சிங் பேஸ் என்ற பிரம்மாண்ட பேரிடர் உருவகப்படுத்துதல் மையம் இந்த திடீர் மாற்றத்திற்கு முக்கியக் காரணமாகும். சீனப் பயணியர்களான ஜாங் சின்யு மற்றும் லியாங் ஹாங் ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்த மையம், சாதாரண பொழுதுபோக்கு பூங்காக்களைப் போல இல்லாமல், இயற்கையின் கோரத் தாண்டவத்தை அச்சு அசலாக மனிதர்கள் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. இந்த மையத்தில் செயற்கையாகப் பயங்கரமான சூறாவளிப் புயல், கொட்டித் தீர்க்கும் பெருமழை மற்றும் திடீர் ஆற்று வெள்ளம் போன்ற ஆபத்தான சூழல்கள் தத்ரூபமாக உருவாக்கப்படுகின்றன. இந்த ஆபத்துகளில் நேரடியாகச் சிக்கிக் கொண்டு, அதில் இருந்து எப்படித் தற்காத்துக்கொள்வது மற்றும் உயிர் பிழைப்பது என்ற அதிரடிப் பயிற்சியைப் பெறவே மக்கள் இங்கு அலை மோதுகிறார்கள். இத்தகைய ஒரு திகிலூட்டும் ஆபத்தான புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு சூழலை அனுபவிக்க ஒரு நபர் இந்திய மதிப்பில் சுமார் 11,000 ரூபாய் வரை கட்டணமாகச் செலுத்துகிறார்கள் என்பதுதான் இதில் ஆச்சரியமான விஷயம். மேலும், குடும்பமாகச் சென்று காடுகளுக்குள் உயிர் பிழைக்கும் உத்திகள் மற்றும் தண்ணீரில் தத்தளிப்பவர்களை மீட்கும் பயிற்சிகளைப் பெற சுமார் 60,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த மையத்தில் மணிக்கு 165 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய அதீத சூறாவளிக் காற்று செயற்கையாக உருவாக்கப்படுகிறது. பங்கேற்பாளர்கள் உள்ளே செல்வதற்கு முன்னால், உடலைப் பாதுகாக்கும் வெப்பப் பாதுகாப்பு உடைகள் மற்றும் தலைக்கவசங்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, சுரங்கங்களுக்குள் திடீரென நீர் புகுந்து வெள்ளக்காடாக மாறும் காட்சிகள் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பாரம்பரியமாக டார்க் டூரிஸம் என்பது போர்கள், பேரழிவுகள் அல்லது மனித உயிரிழப்புகள் நடந்த இடங்களுக்குச் சென்று பார்ப்பதைக் குறிக்கும். ஆனால், சீனாவில் தற்பொழுது உருவெடுத்துள்ள இந்த மாடல், ஆபத்தை வெறும் பார்வையாளராகப் பார்க்காமல், ஒரு பேரிடரின் போது மனித மனங்களில் ஏற்படும் பயம், பதற்றம் மற்றும் சவால்களை ஒரு பாதுகாப்பான கட்டுப்பாட்டு வளையத்திற்குள் நேரடியாகவே உணர்ந்து கொள்வதற்கான ஒரு புதிய பரிமாணமாகப் பார்க்கப்படுகிறது.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
காசு கொடுத்தால் 'ஆப@த்தை' விலைக்கு வாங்கலாம்- ட்ரெண்ட் ஆகும் 'டார்க் டூரிஸம்'
PulseNews சுருக்கம்

சுற்றுலா என்று வரும்போது மக்கள் பொதுவாக இயற்கை எழில் கொஞ்சும் இடங்களையோ அல்லது பொழுதுபோக்கு பூங்காக்களையோ விரும்புவது வழக்கம். ஆனால், சீனா போன்ற நாடுகளில் தற்பொழுது மிகவும் விசித்திரமான ஒரு புதிய சுற்றுலா கலாச்சாரம் வேகமாகப் பரவி வருகிறது.

பணம் செலுத்தி ஆபத்தான இயற்கை பேரிடர்களை நேரடியாக அனுபவிப்பதையும், அதிலிருந்து உயிர் தப்பிப்பது எப்படி என்பதற்கான சாகசப் பயிற்சிகளை மேற்கொள்வதையும் மக்கள் தற்போது ஒரு புதிய டிரெண்டாகப் பின்பற்றி வருகின்றனர்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu