PulseNews
தமிழகம்

திருமணம் வேண்டாம்; நாட்டு மக்களுக்குப் பிரதமர் வேண்டுகோள்

2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதம் அளவில் உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ”சுதேசியத்தையும், சுயச்சார்பையும் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தினால் 100 வது சுதந்திர தினத்தின் போது வளர்ச்சியடைந்த இந்தியாவை இளைஞர்களுக்குப் பரிசளிக்க முடியும்” என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ”விடுமுறைகளில் பொதுமக்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம். வெளிநாடுகளில் திருமணங்களை நடத்த வேண்டாம். இந்தியாவிலேயே திருமணத்தை நடத்த வேண்டும். உள்நாட்டிலேயே சுற்றுலா செல்ல வேண்டும். தேவையின்றி தங்கத்தை வாங்க வேண்டாம்” என்றும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வீடியோவில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியையும் கடுமையாகச் சாடியிருந்தார். முன்னதாக, ராகுல்காந்தி தேர்வுத்தாள் கசிவு, தேர்வுகள் ரத்து, முறைகேடுகள், தாமதமான தேர்வுகள் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத சூழ்நிலையைக் கண்டித்து, ஜூன் 17 அன்று ராஜஸ்தான் மாநிலத்தில் ’சத்ரோன் கி கூஞ்ச்’ திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். அதே போல, பாட்னா, டெல்லி, டேராடூன் மற்றும் அலகாபாத் உள்ளிட்ட நகரங்களிலும் ’சத்ரோன் கி கூஞ்ச்’ கூட்டங்களில் கலந்து கொண்டு பேசிய அவர், பாஜக ஒன்றிய அரசின் குறைபாடுகளைக் கடுமையாகச் சாடியிருந்தார். மேலும், பாஜகவின் முறையற்ற நிர்வாகத்தினால் நாட்டில் உள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், இந்த வீடியோவில் பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியைச் சாடியுள்ளார் என்று கூறப்படுகிறது.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
திருமணம் வேண்டாம்; நாட்டு மக்களுக்குப் பிரதமர் வேண்டுகோள்
PulseNews சுருக்கம்

2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதம் உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த வளர்ச்சியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சுயசார்பு மற்றும் சுதேசியக் கொள்கைகளை மக்கள் தொடர்ந்து பின்பற்றினால், இந்தியாவின் 100-வது சுதந்திர தினத்திற்குள் வளமான நாட்டை இளைஞர்களுக்குப் பரிசளிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், விடுமுறை காலங்களில் பொதுமக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu