‘நாம் தான் ஆதரவு தர வேண்டும்’ - ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த சிம்பு!
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் நடித்துள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். கிராமத்து பின்னணியில் கல்யாணத்தை மைய்யப்படுத்தி கலகலப்பு நிறைந்த படமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம் கடந்த 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏற்கனவே படத்தின் தலைப்பு பலரது கவனத்தை ஈர்த்தது. சமீபத்தில் நடந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவிலும் கார்த்திக் சுப்புராஜ், அயலான் ரவிகுமார், டியூட் கீர்த்தீஸ்வரன், பாரி இளவழகன் உள்ளிட்ட பல இயக்குநர்கள் படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து சூரி, கார்த்திக் சுப்புராஜ் தங்களது எக்ஸ் பக்கம் வாயிலாக படத்தை பாராட்டியிருந்தனர். இந்த நிலையில் சிம்பு இப்படத்திற்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். அதோடு தனது ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளும் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மொத ராத்திரி படத்தை பார்த்தேன், உண்மையிலேயே என்ஜாய் பண்ணேன். மற்ற மொழிகளில் சிறிய மற்றும் அழகான படங்களை பார்த்தால் எப்படி ஒரு அன்பையும் ஆதரவையும் கொடுப்போமோ அதையே ஒரு தமிழ் படங்களுக்கும் கொடுக்க வேண்டும். ஒரு கிராமத்துத் திருமணப் பின்னணியில், ஒரே இரவில் நடக்கும் கதை இது. இதில் வரும் பல கதாபாத்திரங்களும், சிறிய தருணங்களும் மிகவும் இயல்பாக அமைந்திருந்தது. கதைக்களம், நகைச்சுவை, மனிதர்களுக்கு இடையிலான உரையாடல்கள் மற்றும் கதாபாத்திரங்களின் சித்தரிப்பு என அனைத்தும் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு புதிய இயக்குநரும் அவரது குழுவும், மண்ணின் மணத்தோடு கூடிய சுவாரஸ்யமான ஒரு படைப்பை உருவாக்கியிருப்பதை கண்டது மிகுந்த மகிழ்ச்சி. இயக்குநர் ராஜா கருப்பசாமி மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது பாராட்டுகள். தயாரிப்பாளர்களுக்கும் ஒரு சிறிய வேண்டுகோள்... இது போன்ற படங்கள் மக்களைச் சென்றடைய கூடுதல் உழைப்பு தேவைப்படுகிறது. தரமான படைப்புகள் நிச்சயம் கண்டறியப்பட வேண்டும். எனது ரசிகர்கள் மற்றும் சினிமா விரும்பிகள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், இப்படத்தை திரையரங்குகளில் சென்று பார்த்து, அக்குழுவை ஆதரியுங்கள். முழு படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள். தொடர்ந்து நல்ல திரைப்படங்களை உருவாக்குங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். Watched #ModhaRathri and really enjoyed it. We often discover small, beautiful films from other languages and celebrate them so much. When a Tamil film attempts something fresh with a new team, I feel we should give it the same love and support. A story unfolding over a single... pic.twitter.com/wcI2E9XI9G — Silambarasan TR (@SilambarasanTR_) August 28, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவான ‘மோத ராத்திரி’ திரைப்படம் கடந்த 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கிராமத்து பின்னணியில், திருமணத்தை மையமாகக்கொண்டு நகைச்சுவை திரைப்படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், பரத் சங்கர் இசையமைத்துள்ளார். முன்னதாக, இப்படத்தின் தலைப்பு பலரது கவனத்தை ஈர்த்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கார்த்திக் சுப்புராஜ், அயலான் ரவிகுமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்த படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று நடிகர் சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.