PulseNews
தமிழகம்

ஒட்டன்சத்திரம் அருகே ஒற்றை யானை உலா: மக்கள் பீதி, வனத்துறைக்கு அவசர கோரிக்கை!

ஒட்டன்சத்திரம் அருகேபுலிகுத்தி காடு பகுதியில் உலா வந்த ஒற்றை யானையால் பொதுமக்கள், விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பாச்சலூர் செல்லும் சாலையில் உள்ள புலிகுத்தி காடு பகுதியில் ஒற்றை யானை உலா வந்ததால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, புலிகுத்தி காடு பகுதியில் சாலையோரமாக நடமாடியதாக கூறப்படுகிறது.

இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்து அச்சமடைந்தனர். சிலர் யானையின் நடமாட்டத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். புலிகுத்தி காடு மற்றும் பாச்சலூர் செல்லும் சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. மேலும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளும், விவசாயிகள் தொடர்ந்து சென்று வரும் பாதைகளும் அமைந்துள்ளதால், யானையின் நடமாட்டம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் விவசாய பணிகளுக்காக செல்லும் விவசாயிகள், சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர். யானை விவசாய நிலங்களுக்குள் புகுந்தால் பயிர்கள் சேதப்படுத்துவதுடன், மனிதர்கள் மற்றும் வனவிலங்குகளுக்கு இடையே மோதல் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால் புலிகுத்தி காடு பகுதியில் யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும், யானை விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், யானையின் நடமாட்டம் குறித்து பொதுமக்களுக்கு உரிய எச்சரிக்கை விடுப்பதுடன், தேவையான இடங்களில் வனத்துறை பணியாளர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் தொடர்ந்து யானைகள் நடமாட்டம் காணப்பட்டு வரும் நிலையில், மனித–வனவிலங்கு மோதலை தடுக்கும் வகையில் வனத்துறை நிரந்தரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஒட்டன்சத்திரம் அருகே ஒற்றை யானை உலா: மக்கள் பீதி, வனத்துறைக்கு அவசர கோரிக்கை!
PulseNews சுருக்கம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள புலிகுத்தி காடு பகுதியில் ஒற்றை யானை புகுந்துள்ளதால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர். வனப்பகுதியிலிருந்து வெளியேறிய அந்த யானை, பாச்சலூர் செல்லும் சாலையில் உள்ள காட்டுப் பகுதியில் நடமாடியது.

யானையின் நடமாட்டத்தால் பீதி அடைந்துள்ள பொதுமக்கள், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வனத்துறைக்கு அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu