சைப்ரஸ் நாட்டில் படகு விபத்தில் 8 பேர் பலி
சைப்ரஸ் படகு கவிழ்ச்சி துயரம்: வட சைப்ரஸ் கடற்கரையில் 270 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து 8 பேர் பலி, 22 பேர் காணாமல் போன நிலையில், 237 பேரை மீட்க மீட்புப்பணி தீவிரமாக நடைபெறுகிறது. Cyprus boat tragedy: Overloaded vessel from Kyrenia to Turkey capsizes off northern coast, killing 8 and leaving 22 missing as rescue teams save 237 passengers and detain captain and crew for investigation.

சைப்ரஸ் நாட்டின் வடக்கு கடற்கரை பகுதியில் 270 பேருடன் சென்ற படகு கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கியை நோக்கிச் சென்ற இந்த படகு விபத்துக்குள்ளானதில், 22 பேர் மாயமாகியுள்ளனர்.
மீட்புப் படையினர் துரிதமாக செயல்பட்டு இதுவரை 237 பயணிகளை பத்திரமாக மீட்டனர். இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் அதிகாரிகள், படகின் கேப்டன் மற்றும் பணியாளர்களைக் கைது செய்துள்ளனர்.